தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

ஜனாதிபதிக்கு பச்சை மிளகாய் சவால் விடுத்த பாலித தெவரப்பெரும எம்.பி!



9 நாட்களை கடந்து நீதி தேடி விரைந்து செல்லும் ஈருருளிப் பயணம்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 08:13.02 AM GMT ]
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இன்று 9 நாட்களை கடந்து Murten நகரை நோக்கி சென்று கொண்டிருகின்றது.
பயண வழிகளில் மலைப் பிரதேசங்களாக அமைந்திருந்தாலும் பயணத்தை மேற்கொள்பவர்கள் மிக உறுதியோடு ஐ.நா நோக்கி பயணிக்கின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கும் பேரணியில் தமது நீதிக்கான பயணத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, தொடர்ந்து மனிதவுரிமை ஆணையகத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
ஈருருளிப் பயணத்தை மேற்கொள்பவர்கள் அனைத்து தமிழ் மக்களையும் இப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு வேண்டி நிற்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo0.html

ஜனாதிபதிக்கு பச்சை மிளகாய் சவால் விடுத்த பாலித தெவரப்பெரும எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 08:57.39 AM GMT ]
சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பச்சை மிளகாய் சவாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எதிர்நோக்கினார்.
சவாலுக்கு அமைய இரண்டு பச்சை மிளகாய்களை இரண்டு நிமிடங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற போதிலும் அவர் ஆறு பச்சை மிளகாய்களை சாப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் பச்சை மிளகாயை சாப்பிடுமாறு சவால் விடுத்தார்.
நாட்டின் ஜனாதிபதிக்கு தான் இந்த சவாலை விடுப்பதாகவும் ஜனாதிபதியே சிறுநீரக நோயாளிகள் தொடர்பான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் தெவரப்பெரும குறிப்பிட்டார்.
சுகாதார துறைக்கு தேவையான நிதியை ஜனாதிபதியே ஒதுக்காமல் இருக்கின்றார்.
பெரும் தொகையை தனக்காக ஒதுக்கி கொள்ளும் ஜனாதிபதி, சிறுநீரக நோயாளிகளுக்காக சிறு தொகையையே ஒதுக்கிறார்.
இதனால் மூன்று பச்சை மிளகாய்களை சாப்பிட்டு வாயின் வலியை உணருமாறு தான் ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo2.html

Geen opmerkingen:

Een reactie posten