[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:41.17 AM GMT ]
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களின் விருப்புக்களை அறிந்து கொள்வதற்காக இந்த திருத்தங்களை முன்வைப்பதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் வரும் 13வது திருத்தத்தில் மீள் உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் அதில் சில புதுப்பிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த திருத்தங்களை கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தமக்கு வாக்குகளை கேட்கவுள்ளதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த ராஜபக்ச இந்த வாரம் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோரவுள்ளார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit3.html
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 12:05.38 PM GMT ]
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு - விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் தவபாலன் அனுசன் (வயது- 20), மன்னாரை நிரந்தரமுகவரியாகக் கொண்டு யாழ். இளவாலையை தற்காலிக முகவரியாக கொண்ட செபஸ்தியன்பிள்ளை ரொபேட் (வயது-43) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் போலி கடவூச்சீட்டு மற்றும் விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, செபஸ்தியன்பிள்ளை ரொபேட் அவர்களுக்கு புலிகள் வைத்த பெயர் டயஸ் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUivy.html
Geen opmerkingen:
Een reactie posten