தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தீர்மானங்களை வெளியிடுவதில் சிக்கல்
தமிழரசுக் கட்சியின் 15 தீர்மானங்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் வாசிக்கப்பட்டிருந்தது.
அவ் வேளையில் சிலர் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்கியதாக தீர்மானம் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி இன்று மாலை இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu6.html
மாணவியை கடத்தப் போவதாக கூறி தாயிடம் கப்பம் கேட்ட ஐவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 11:43.44 AM GMT ]
யாழ்ப்பாணம் குடந்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவியை கடத்தப் போவதாகக் கூறி, அம்மாணவியின் தாயிடம் 75 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயர்தரத்தில் கல்வி பயிலும் தனது மகளுடன் வசித்து வரும் பெண்ணொருவரே இவ்வாறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் மகளை கடத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ள ஐந்து சந்தேகநபர்கள், மகளை கடத்தாதிருக்க வேண்டுமாயின் பணம் வேண்டும் என்று கூறி, மூன்று தடைவைகளில் 75 ஆயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றும் குறித்த பெண்ணிடம் சந்தேக நபர்கள் கப்பம் பெற முயற்சித்த போது, இதையறிந்த அப்பகுதி ஆசிரியர் ஒருவர், இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, கப்பம் வாங்குவதற்காக வந்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் மாட்டியுள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த 3 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் உடுப்பிட்டி, வதிரி, கலிகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 27, 29, மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu7.html
Geen opmerkingen:
Een reactie posten