தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸ் நேரில் ஆஜராகத் தேவையில்லை



மட்டக்களப்பில் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 09:51.08 AM GMT ]
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் மதுபானம் தொடர்பான செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் திருப்பெருந்துறையில் மதுபானம் தொடர்பான செயற்பாடுகளை முற்றாக தடுத்து நிறுத்தக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பெருந்துறை முருகன் ஆலயத்துக்கு முன்பாக கூடிய திருப்பெருந்துறை மாதர் அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம்,விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதிக்கு வந்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ரங்கநாதன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் தொழில்நுட்பவியலாளர் உட்பட பலர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையினை நடத்தினர்.
14 தினங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் சார்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் பின்னர் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் எந்தவித மதுபான செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு நடந்தால் அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கையெடுப்பார்கள் என அங்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி உறுதியளித்தார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கு வருகைதந்தவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo6.html
திட்டமிட்டபடி ஊவா மாகாணசபை தேர்தல் 20ஆம் திகதி நடைபெறுமா?
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 10:58.03 AM GMT ]
மொனராகலை மாவட்டத்தில் இன்று நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமைதியான நிலை இம்மாவட்டத்தில் திரும்பாதவரை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுவது சந்தேகமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் நிலவிவரும் அமைதியற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் அமைதியான நிலை திரும்பாத வரைக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலை 20ம் திகதி நடத்துவதா என்று இறுதி முடிவு எடுக்கப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo7.html
சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸ் நேரில் ஆஜராகத் தேவையில்லை
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 11:58.03 AM GMT ]
சூளைமேடு கொலை வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, அவர் 1996ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, டக்ளஸ் தேவானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அவரை நேரில் ஆஜராகும்படி சென்னை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகம் மூலம் வீடியோ கொன்பரன்சில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgpz.html

Geen opmerkingen:

Een reactie posten