[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 08:16.51 AM GMT ]
பத்திரிகைகள் வாயிலாக அறியும் விடயங்களை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை குறித்த தமது வெளிப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிகழ்வொன்று அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,
இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை. இதற்கான காரணங்களாக, இலங்கை அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் இருப்பதும், மக்கள் அந்த நாடு குறித்து அதிக கவனம் செலுத்தாததும் முக்கியமாகின்றன.
குறிப்பாக இலங்கை தொடர்பில் அறிந்துகொள்ள பெருமளவு அமெரிக்க மக்கள் பத்திரிகைகளையே நம்பியுள்ளனர். அத்துடன் தனிப்பட்ட நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் சக்திகள், பயங்கரவாத நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து இலங்கை குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளன.
இதன் காரணமாக அமெரிக்காவின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் மாற்றமடைவதற்கு சில காலம் எடுக்கலாம். ஆனால் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் இலங்கை குறித்து சாதகமான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளன.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் ஒரு சிறிய சம்பவம் கூட இடம்பெறவில்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo3.html
பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் மரணம்: தந்தை நீதிமன்றில் மனுத் தாக்கல்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 08:21.40 AM GMT ]
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், பொலிஸார் ஒரு மணித்தியாலமாக தனது மகன் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளதாக தந்தையொருவர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸார் தன்னை கீழே போட்டுக்கொண்டு தாக்கியதாக மகன் என்னிடம் கூறினார். தாக்குதலுக்கு இலக்கான மகனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினோம்.
எனினும், பொலிஸார் அதனை கருத்திற் கொள்ளவில்லை என தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கினாலேயே இந்த மரணம் சம்பவித்தது என இளைஞரின் தந்தையின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லக்ஸான் டயஸ் தெரிவித்துள்ளார்.
கந்தகெட்டி என்னும் இடத்தைச் சேர்ந்த 17 வயதான சதுன் மாலிங்க என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.
பொலிஸாரின் தாக்குதல் மற்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கே மகனின் மரணத்திற்கான காரணம் என குறித்த இளைஞரின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றில் இது தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளைஞரின் மரணம் தொடர்பிலான நீதிமன்ற அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo4.html
இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு கூட்டமைப்பு அஞ்சுகின்றதா? கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 09:39.13 AM GMT ]
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்த பிரேரணை...
.. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் தலைமைப்பீடம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி கோரிக்கையினை அடிப்படையாக கொண்ட பிரேரணை கடந்த மே மாதம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் உருவாக்கப்பட்டு சபைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரு அமர்வில் சிவாஜிலிங்கம் கலந்து கொள்ளாமலும் மற்றய அமர்வுகளில் ஒத்திவைக்கப்பட்டும் இருந்த நிலையில்,
குறித்த பிரேரணை கடந்த 14வது மாகாணசபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிக்கும் வகையில் திருத்தங்களுடன் 15வது அமர்வில் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருத்தப்பட்ட பிரேரணை இன்றைய தினம் நடைபெற்ற 15வது அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு வவுனியாவில் கூடி ஆராய்ந்ததன், பிரகாரம் குறித்த பிரேரணையினை பிற்போடுமாறு தமக்கு கட்சியின் தலைமை உத்தரவு வழங்கியிருப்பதாகவும், சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருக்கும் பிரேரணையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றது என நம்புவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அது எங்கே நடைபெற்றது? யாருக்கு நடைபெற்றது? என்பன போன்ற விடயங்கள் இல்லாமையினால், முழுமையான தரவுகளுடன் ஐ.நா சபைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடம் வழங்கும் வரையில் குறித்த பிரேரணையினை பிற்போடுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் சபையில் பேசிய சிவாஜிலிங்கம் இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு கூட்டமைப்பு அஞ்சுகின்றதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு நாம் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அவ்வாறு அஞ்சப் போவதுமில்லை. என குறிப்பிட்டார்.
இதனையடுத்து தன்னுடைய பிரேரணையினை முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று பிற்போடுவதாக கூறிய சிவாஜிலிங்கம், 2வது பிரேரணையான ஐ.நா சபையின் சர்வதேச விசாரணைக்கு, இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற பிரேரணையினை முன்மொழிந்தார்.
இதற்கமைவாக குறித்த பிரேரணை சபையில் எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgo5.html
Geen opmerkingen:
Een reactie posten