தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு கைது (செய்தித் துளிகள்)!!

ரயிலில் பயணிக்கும் படையினரும் பொலிஸாரும் டிக்கட் எடுக்காததால் குழப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:13.38 AM GMT ]
ரயிலில் பயணிக்கும் இராணுவம் உள்ளிட்ட படையினரும் பொலிஸாரும் டிக்கட் எடுப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கட் எடுப்பதில்லை என ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதனால் ரயில்வே டிக்கட் பரிசோதகர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சில பொலிஸ் மற்றும் படையதிகாரிகள் உரிய ரயில் பெட்டிகளில் பயணம் செய்வதில்லை.
டிக்கட் பரிசோதனை செய்யும் அதிகாரிகளை படையதிகாரிகள் தாக்கிய சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன.
அநேக சந்தர்ப்பங்களில் படையதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் வாய்த்தர்க்கம் ஏற்படுகின்றது.
கடந்த 29ம் திகதி யாழ் தேவி ரயிலில் பயணம் செய்த இராணுவ அதிகாரியொருவர், டிக்கட் பரிசோதகரைத் தாக்கியதில், அவர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தொழிற்சங்க ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இலங்கை ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhr3.html
நாடாளுமன்றத்தை முதலாளிமார் கைப்பற்றிக்கொள்ளக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது: ராஜித சேனாரட்ன
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:32.21 AM GMT ]
நாடாளுமன்றத்தை முதலாளிமார் கைப்பற்றிக்கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படாவிட்டால்> முதலாளிமார் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றிக்கொள்வார்கள்.
தேர்தல் தொகுதி மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய ஓர் தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
தேர்தல் முறைமை காரணமாக நாடாளுமன்றம் ஊழல் மோசடிமிக்கதாக மாற்றமடைந்துள்ளது.
அரசியல் பற்றி பேசக்கூடிய சொற்ப அளவிலானவர்களே இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசியலை புரிந்து கொள்ளக் கூடியவர்களும் இன்று நாடாளுமன்றில் வெகு சொற்ப அளவிலேயே காணப்படுகின்றனர்.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாட்டை மீட்டெடுத்ததனைப் போன்று, நாட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாணந்துறையில் நடைபெற்ற கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhr5.html
மொனராகல மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதா இல்லையா என இன்று தீர்மானிக்கப்படும்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 01:21.59 AM GMT ]
மொனராகல மாவட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 20ம் திகதி திட்டமிட்டவாறு ஊவா மாகாணத்தின் மொனராகல மாவட்டத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் காரியாலயத்தில் விசேட கூட்டமொன்று, இன்று மாலை நடத்தப்பட உள்ளது.
பொலிஸ்மா அதிபர், பிரதிப்பொலிஸ்மா அதிபர், பதுளை, மொனராகல பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி, பதுளை மொனராகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேவை ஏற்பட்டால் மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களின் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு சனிக்கிழமை பதுளை மாவட்டத் தேர்தலையும், இன்னொரு சனிக்கிழமை மொனராகல மாவட்டத்தில் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 23ம் திகதி முதல் இதுவரையில் மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விரிவாக இன்று ஆராயப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மொனராகலயில் தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட பத்து குழுக்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட பத்து குழுக்கள் மொனராகலயில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சட்டவிரோதமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், தேர்தல் விதி மீறல்களை தடுக்கும் நோக்கில் பத்து விசேடக் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தக் குழுக்கள் தேர்தல் முடிவடையும் வரையில் மொனராகல மாவட்டத்தில் தங்கியிருப்பார்கள்.
மாவட்டம் முழுவதிலும் காணப்படும் சட்டவிரோத தேர்தல் பிரச்சார பதாதைகளை அகற்றுதல், சட்டவிரோத கட்சிக் காரியாலயங்களை அகற்றுதல் போன்ற பணிகளுக்கு இந்த அதிகாரிகள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
இதேவேளை, பதுளை மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையாளர் கடந்த வாரம் மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொனராகல் மாவட்டத்தில் அதிகளவான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhr7.html
குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு கைது (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 01:36.28 AM GMT ]
குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்லாந்தோட்ட ரிதியாகம சியம்பலாகஸ்வௌ பிரதேசத்தில் வைத்து குறித்த பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடிபோதையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டு குழப்பம் விளைவித்ததாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பௌத்த பிக்கு வீதியில் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாந்தோட்ட கசாகல விஹாரையின் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்ட போது அவருக்கு நீதவான் 2500 ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீசா இன்றி தங்கியிருந்த ஸ்பெயின் பெண் கைது
ஸ்பெயின் நாட்டு பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ வௌல பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த யுவதி கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
வீசா இன்றி தங்கியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண்ணை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருணாகலில் நான்கரை வயது சிறுமி காணவில்லை
குருணாகல் வெல்லவ என்ற இடத்தில் நான்கரை வயது சிறுமி ஒருவர், இன்று அதிகாலை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்த சம்பவம் கடத்தலாக இருக்கலாம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே அநுராதபுரத்தில் கடந்த மாதத்தில் சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டு கப்பம் கோரிய நிலையில் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறுவர்களை கப்பம் பெறுவதற்காக கடத்திச்செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhsy.html

Geen opmerkingen:

Een reactie posten