[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:50.26 AM GMT ]
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம், யாழ்.குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
யாழ்.நகரப்பகுதியிலிருந்து கொழும்பு செல்லும் 40 பயணிகளுடன் குறித்த பஸ் பயணமாகியுள்ளது.
இந்நிலையில் வடக்கிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதி பத்திரம் தொடர்பில் அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுவந்துள்ளமையினால், குறித்த பேருந்து ஏ-9 வீதியூடாக பயணிக்காமல் புத்தூர் வழியாக பயணித்துள்ளது.
இந்நிலையில் பருத்தித்துறை வீதியையும், ஏ-9 வீதியையும் இணைக்கும் புத்தூர் ஆவரங்கால் வீதியில் உள்ள வண்ணத்திப் பாலத்திற்கு அருகில் குறித்த பேருந்து மிகை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு இறங்கி தடம்புரண்டுள்ளது. இதில் கட்டுடை மானிப்பாயை சேர்ந்த என்.சதீசன் (வயது-24) என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும் குறித்த விபத்துச் சம்பவத்தில் 16 பயணிகள் படுகாயமடைந்துள்ளதுடன், மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், மற்ற பயணிகள் யாழ்,போதனா வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தையடுத்து விபத்து நடத்த இடத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். தங்களுடைய உறவினர்களும் கொழும்பு சென்றிருந்தனர். அவர்களுடைய பேருந்தாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பெருமளவான மக்கள் குறித்த இடத்தில் கூடிவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த படையினர் மற்றும் மேலதிக பொலிஸார் மக்கள் கலைந்து செல்ல, பணிக்கப்பட்டதன் பின்னரே பேருந்தினுள் இருந்த உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhr6.html
எஸ்.பி. திஸாநாயக்கவின் வீட்டில் புதையல்! காணியை சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 01:51.57 AM GMT ]
குறித்த வீடு அமைந்துள்ள நிலப்பரப்பை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது.
குறித்த வீட்டையும் காணியையும் தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சுவீகரித்துக் கொண்டுள்ளதாக, தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தக் காணிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
குறித்த வீட்டை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாக அறிவிப்பதற்கு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த வீடு அமைந்துள்ள பகுதியில் இரண்டாம் ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திறைசேரி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திறைசேரிப் பகுதியை கண்டுபிடிக்கும் நோக்கில் விரைவில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhsz.html
முஸ்லிம் மக்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட ஜனாதிபதி இடமளிக்கவில்லை: ரவூப் ஹக்கீம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:21.47 AM GMT ]
ஆளும் கட்சியின் ஒரு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். எனினும், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதனை ஜனாதிபதி அனுமதிக்கவில்லை.
முஸ்லிம் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே ஊவா மாகாணசபைத் தேர்தலில் கூட்டணியாக செயற்படுகின்றோம்.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டுமென முஸ்லிம் மக்கள் கோருகின்றனர்.
மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்ற ரீதியில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.
ஊவா மாகாணசைபத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டாலும், அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை.
ஜனாதிபதி இனவாதமின்றி நாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒருவர். முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதனை ஜனாதிதி வேடிக்கை பார்க்கமாட்டார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்து, சுதந்திர நாடொன்றை உருவாக்கிய பெருமை ஜனாதிபதியைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களை குழியில் தள்ளவும் அரசாங்கத்தை விட்டு விலகவும் எனக்குத் தெரியும்: ஹக்கீம்
ஏனையவாகளை குழியில் தள்ளவும் உரிய நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் எனக்குத் தெரியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் அரசாங்கத்தை விட்டு விலகி அதன் மூலம் ஏனையவர்களை குழியில் தள்ளிவிட எனக்கு நன்றாகத் தெரியும்.
முஸ்லிம் காங்கிரஸ் சில சவால்களை எதிர்நோக்கிய போதிலும் கட்சியின் பலம் குறையவில்லை.
இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கட்சி என்ற போதிலும், அரசாங்க விரோத கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் அடையாளப்படுத்தப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு சார்பாக பிரச்சாரம் செய்ய வேண்டுமாயின் அதனை சுலபமாக செய்ய முடியும். எனினும் நாம் அப்படிச் செய்யப் போவதில்லை.
அவ்வாறு செய்தால், எமக்கு வெட்கமோ பயமோ கிடையாது என மக்கள் நினைப்பார்கள். யாருடைய அனுதாபத்திலும் அரசியல் நடாத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.
வன்முறையான அரசியல் மிகவும் ஆபத்தானது என்பதனை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒன்றாக இருந்து வெட்டுகின்றோம் என நினைக்கக்கூடாது.
போரின் பின்னரான காலத்தில் நாம் வாழ்கின்றோம். எதிர்வரும் காலங்களில் பொதுதத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாம் எடுக்கும் தீர்மானம் சர்ச்சைக்குரியதாக இருக்கும்.
எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை மூலம் உசிதமான தீர்மானம் எடுக்கப்படும். கட்சியின் சிலர் அவசரப்பட்டு கருத்து வெளியிடுகின்றனர்.
எனினும் அவ்வாறு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. என்ன தீர்மானம் எடுத்தாலும் அது கட்சியின் இணக்கப்பாட்டுடன் எடுக்கப்பட வேண்டும்.
கிழக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. அம்பாறை சேருவில பிரதேசங்களில் இதனை தெளிவாக பார்க்க முடியும். இந்தப் பிரச்சினை வடக்கிலும் காணக்கிடைக்கின்றது.
குற்றங்களைச் சுட்டிக்காட்ட முதுகெலும்பு இருக்க வேண்டும். அந்த தைரியம் இப்போது எமக்கு உண்டு என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhr4.html
Geen opmerkingen:
Een reactie posten