தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் செல்லுபடியற்றதாக உள்ளன: தினேஷ் குணவர்த்தன!

தமிழ்ப் பிரிவினைவாதத்தின் ஆபத்துக்கள் குறித்து உலகிற்கு விளக்கப்படும்: உதய கம்மன்பில
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 12:52.03 AM GMT ]
தமிழ்ப் பிரிவினைவாதத்தின் ஆபத்துக்கள் குறித்து உலகிற்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பிலான பிழையான பிரச்சாரங்களை பொறுப்பு வாய்ந்த உலக நாடுகளின் முன்னிலையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலையான அபிவிருத்திக்கான பிராந்திய அரசாங்கங்களின் வலையமைப்பு என்ற அமைப்பின் இணைத் தலைவராக என்னை தெரிவு செய்துள்ளார்கள்.
இந்தப் பதவியை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
பதவியை பெற்றுக் கொள்ள வழிகாட்டிய ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgv4.html
அல்கைதா தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக இலங்கை மாறி வருகின்றது: சிங்கள ராவய
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:03.48 AM GMT ]
அல்கைதா தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கைதா தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் அல்கைதா காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையிலும் விரைவில் இவ்வாறான ஓர் காரியாலயமொன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உலக மக்களின் சார்பில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அல்கைதா தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் சிங்கள ராவய அமைப்பு அமெரிக்கத் தூதரகத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgv5.html
படையதிகாரிகள் என்ற சந்தேகத்தினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வீசா வழங்க கனடா மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:31.51 AM GMT ]
படையதிகாரிகள் என்ற சந்தேகத்தினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கனேடிய அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது.
கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிறைச்சாலைகள் சம்மேளனமொன்றுக்கு விஜயம் செய்ய ஆயத்தமாகியிருந்த சிறைச்சாலை திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் படைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இலங்கைக்கான கனேடிய தூதரகம் வீசா வழங்க மறுத்துள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் திஸ்ஸ ஜயதிஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி எமில் ரஞ்சன் ஆகிய அதிகாரிகளுக்கே இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறைச்சாலைகள் ஒன்றியத்தினால் வருடாந்தம் அபா என்னும் மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது.
இம்முறை இந்த மாநாடு கனடாவில் கடந்த 9ம் திகதி ஆரம்பமானது. மாநாடு ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்காக இலங்கையின் சார்பில் குறித்த இரண்டு அதிகாரிகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இலங்கை அரசாங்கம் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் படையதிகாரிகளுக்கு வீசா வழங்க முடியாது எனவும் கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே சிறைச்சாலை திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளினதும் வீசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
படையதிகாரிகள் என நினைத்து குறித்த அதிகாரிகளுக்கு, கனடா வீசா வழங்கவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரட்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgwy.html
ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஊவா மக்கள் சிறந்த பதிலளிப்பார்கள்: ஜே.வி.பி. (செய்தித்துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:58.51 AM GMT ]
ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஊவா மாகாண மக்கள் சிறந்த பதிலளிப்பாளர்கள் என ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊவா விவசாயிகளை இந்த அரசாங்கம் வேதனையடையச் செய்துள்ளது.
மக்களை வறியவர்களாக்கிய இந்த அரசாங்கத்திற்கு ஊவா மாகாண மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
விவசாயத்தை மையமாகக் கொண்டு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். எனினும் அரசாங்கம் இதனை செய்யத் தவறியுள்ளது.
அரசாங்கம் விவசாயிகளின் மேம்பாட்டை உறுதி செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாடு வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
விவசாயிகளின் கடுமையான உழைப்பினை, ராஜபக்ச குடும்பத்தினர் தங்களது வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசங்கத்தின் தோல்வி உறுதியாகியுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைக் காரியாலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது அரசாங்கம் பாரிய தோல்வியைத் தழுவும் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒற்றுமையில்லை, ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்க முடியாது என ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த பிரச்சாரங்களை நாம் பொய்பித்துக் காட்டினோம்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் இணைய தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சேறுபூசல்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரசாங்கத்தின் தேர்தல் பணிகளுக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழில் பறிபோய்விடக் கூடாது என்ற அச்சத்தினால் அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgw0.html
வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் செல்லுபடியற்றதாக உள்ளன: தினேஷ் குணவர்த்தன
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 02:51.48 AM GMT ]
வடக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வது முறையற்ற செயற்பாடாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வடக்கு மாகாணசபை அமர்வின் போது, சர்வதேச விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணசபையில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் அரசு குழப்பமடையவில்லை. கூட்டமைப்பு இவ்வாறு செயற்படுவது புது விடயமுமல்ல.
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளுக்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கினால்தான் அவை செல்லுபடியாகும்.
ஆனால், அரசமைப்பை மீறும் வகையில் நிறைவேற்றப்படும் எந்தப் பிரேரணைக்கும் ஆளுநர் அங்கீகாரம் வழங்கமாட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் மாகாணசபைக்கு வெளியில் செல்லுபடியற்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் செயற்படுத்தப்படுகின்ற ஆணைக்குழுவுக்கு வந்து சாட்சி வழங்கமுடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgw2.html

Geen opmerkingen:

Een reactie posten