[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 03:23.12 AM GMT ]
சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இதற்கான முயற்சிகள் இடம்பெறும் என்று சீன இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சீனாவுக்கு எழுந்துள்ள பயத்தை போக்கும் என்றும் குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சீன பிரதமர், துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் வழங்குவார். இதன்கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இரண்டு நாடுகளும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சீனாவின் கடன் உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் இந்து சமுத்திர பிரசன்னமானது, சீனா தமது படைகளை வெளிநாடுகளில் நிலை கொள்ள செய்யும் என்பதையும் உணர்த்தி நிற்பதாக புதுடில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டபிள்ளை எச்சரித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgw3.html
இலங்கை இராணுவத்தின் அழைப்பு: பதில் வழங்காத இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 03:36.05 AM GMT ]
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் இன்னும் அதற்கு இந்திய தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்று இலங்கையின் கூட்டுப்படை தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது அழைப்பு இந்தியாவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் சிங்குக்கு அனுப்பப்பட்டது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்தநிலையில் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ள எயார் மார்ஸல் அருப் ராஹாவின் பெயருக்கு மீண்டும் ஒரு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாக ஜெகத் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgw4.html
Geen opmerkingen:
Een reactie posten