தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 september 2014

தமது பாதையில் பயணிக்க கூட்டமைப்பு தயாராகிறதாம்: டக்ளஸ் பெருமிதம்!

32 வருடங்களின் பின்னர் இலங்கையை வந்தடைந்தார் கியூபா வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 03:37.43 AM GMT ]
கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ ருத்ரிகோஸ் பரில்லா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை 4.45 மணிக்கு இலங்கை வந்தடைந்தார்.
இவரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளனர்.
இலங்கைக்கு கியூபா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 32 வருடங்களின் பின்னர் விஜயம் செய்துள்ளார்.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 55வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதன் நிமித்தமே கியூபாவின் வெளியுறவு அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக கியூபாவுக்கு விஜயம் செய்திருந்தபோது, இலங்கைக்கு வருமாறு கியூபாவின் வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit4.html
தமது பாதையில் பயணிக்க கூட்டமைப்பு தயாராகிறதாம்: டக்ளஸ் பெருமிதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 05:05.00 AM GMT ]
தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது பாதையில் பயணிக்க தயாராகியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிப் பேச்சுக்களாலும் வெற்றுக் கோஷங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது. நடைமுறை சாத்தியமான வழியில்தான் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, வவுனாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் முடிவு கண்கெட்ட பின்னரான சூரிய நமஸ்காரம், காலம் கடந்த ஞானோதயம், எளினும் இறுதியில் எமது பாதைக்கே அவர்கள் வந்திருக்கிறார்கள்.
பேசியதை செயலில் காட்ட முன்வருவார்களானால் அவர்களுடன் நாங்களும் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். நாம் அரசுடன் இருக்கிறோம்.
அரசுடன் இருந்துதான் எமது மக்களுக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுகின்றோம். அரசுடன் இருந்து கொண்டே அரசியல் தீர்வொன்றைப் பெறவும் முயன்று வருகிறோம். எமது பாதை சரியானது. தொடர்ந்தும் அந்தப் பாதையில் பயணிப்போம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் இப்போது அந்தப் பாதைக்கு வந்திருக்கிறது.
அவர்கள் பேசியது வெறும் பேச்சாக இருக்காமல் உண்மையாக இருந்தால் எமது பயணத்தில் அவர்களும் இணையலாம். இணைந்து தீர்வொன்றுக்காக பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit5.html

Geen opmerkingen:

Een reactie posten