[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 09:13.16 AM GMT ]
இது சம்பந்தமான உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதம் ஜனாதிபதியின் செயலகத்தினால் நேற்று மாலை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ரகசியத்தை பேண உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேற்படி சட்ட விளக்கம் தொடர்பான விசாரணைகளை பிரதம நீதியரசரின் அலுவலக அறையில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இவ்வாறான தேசிய முக்கியத்துவமிக்க சட்ட விளக்க கோரல்கள் ரகசியமான முறையில் நடத்தப்படுவதில்லை. சிரேஷ்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு அரசியலமைப்புச் சட்டம் ஆராயப்படும்.
ஆனாலும் ஜனாதிபதியின் இந்த விளக்கம் கோரல் ரகசியமான முறையில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த சட்ட ஆய்வு அமர்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஈவா வனசுந்தர, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நீதியரசர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
அத்துடன் இவர்களில் பிரியந்த ஜயவர்தன அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார். இவரது சகோதரர் உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.
18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடைகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியும்.
எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மாத்திரமே வகிக்க முடியும் என்ற சட்டம் அமுலில் இருக்கும் போதே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றதால், அவர் மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியை வகிப்பது உட்பட பல திருத்தங்களுடன் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp6.html
பறிபோகும் வலி.வடக்கு! ஓர் குட்டி இராணுவ அரசாகுமா?
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 10:05.32 AM GMT ]
யாழ் மாவட்டத்தில் இன்னமும் 19ஆயிரத்து 671பேர் மீளக்குடியேற முடியாதிருப்பதாகவும் 39 நலன்புரி நிலையங்களில் இவர்கள் வாழ்வதாகவும் வலி.வடக்கில் மட்டும் 9400 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தமர்வு ஒன்றில் இராணுவத் தளபதி ஒருவர் வடக்கில் இன்னும் ஆயிரத்து 118 குடும்பங்கள் மட்டும்தான் குடியேற்றப்படாது இருக்கின்றனர் என புதுக்கதை ஒன்றை கூறியிருந்தார்.
எனினும் வளலாய் என்ற இடத்தில் மக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே வேண்டா விருந்தாளியாக ஆளுனர் மீண்டும் பதவியில் ஒட்டியிருக்கிறார்.
மேற்குறித்த நடவடிக்கைகளை அவதானிக்கையில் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் அதி உயர் இராணுவ பிரதேசமாக நிரந்தரமாகவே மாறப்போகிறது என்பதை கோடிட்டுக்காட்டுகிறது.
இந்த பகுதியினுள் கடந்த ஐந்து வருடங்களில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், பெருமளவிலான கட்டிடங்கள் அங்கு காணப்படுவதாகவும் அமெரிக்க செய்மதிப்படங்கள் காட்டுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலி நாட்டில் உரோம் நகரிலும் வத்திக்கான் என்ற புனித நகர- தனிஅரசு ஒன்று இயங்குவது போல வடமாகாண சபையினுள் ஓர் குட்டி இராணுவ அரசு போல இவை தொழிற்பட வாய்ப்பு உள்ளது போலவே தோன்றுகிறது.
ஓர் அரசுக்கு இருக்கவேண்டிய அத்தனை “தகுதி விதி”களையும் கொண்ட இக் குறித்த பகுதி வடமாகாண சபைக்கு அல்லது பாரம்பரிய தமிழ் பிரதேசத்துக்கு பாரிய அச்சுறுத்தலான ஒன்றாகவே இருக்கப்போகிறது. பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த செழிப்பான பகுதியை “துவக்குமுனை” கொண்டு பறித்தெடுத்து நிரந்தரமாகவே படைத்தரப்புக்கு விடுவது ஒருவகையில் காட்டாட்சிக்கே சமம்.
“தகுதி விதிகள்”
“தகுதி விதிகள்”
பரந்த நிலப்பரப்பு – 6500 ஏக்கர் பரப்புடையது. வளமான மண், சிறந்த, நன்னீர் வளம், விவசாய விருத்திக்கு வாய்ப்பாக உள்ளது. கரையோரமும், மைலிட்டி துறைமுகமும், பரந்த கடற்பகுதியும் மீன் வளத் தொழிலுக்கு வாய்ப்பானதாக உள்ளது. கைத்தொழிலுக்கான கனிய வளம், சுண்ணக்கல் விவசாய, கடல்வளம் சார்ந்த கைத்தொழில்கள் (ஏற்கனவே ஜோக்கற் தொழிற்சாலை அங்கு உள்ளதாம்).
போக்குவரத்திற்கான- காங்கேசன்துறை, துறைமுகம், பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை -புகையிரத வீதி இத்துடன் கலாசார மண்டபம், உல்லாச விடுதிகள் என பல்வேறு கட்டிடங்கள், பொலிஸ் நிலையம், பாதுகாப்பிற்கு முப்படையினர், என்றவாறு வடமாகாண சபைக்கு இல்லாத அளவிற்கு உட்கட்டுமானங்கள் ஒருங்கே குவிந்து நிறைந்திருப்பதினால் எதிர்காலத்தில் ஓர் அரசு போல இதுவும் தொழிற்பட வாய்ப்புண்டு.
இத்தகைய வாய்ப்புக்களைக் கொண்ட இப்பகுதி இராணுவப் பிரதேசமாக விளங்குமாயின், வடபகுதி தமிழ்ப் பகுதிக்கு மட்டுமல்ல தென்னிந்தியாவுக்கும் இது பாரிய அச்சுறுத்தலாக மாறலாம்.
இலங்கையில் சீனா வலுவான ஆதிக்கம், பாகிஸ்தான் நெருக்கம், இவைகளுடன் வடபகுதியில் கரையோரங்கள் மற்றும் காடுகள் தோறும் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் இந்தியாவுக்கு இனிப்பான விடயமாக இருக்கப்போவதில்லை.
வெளியேறிய மக்களை மீண்டும் அப்பகுதியிலேயே குடியமர்த்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும். இல்லையேல் விளைவுகளை இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து இந்தியாவும் அனுபவிக்க வேண்டி வரலாம்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjp7.html
Geen opmerkingen:
Een reactie posten