தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

இந்தியாவில் உளவு பார்த்த இலங்கையர் கைது: பழைய செய்தி என்கிறது பாகிஸ்தான்!

உகணையில் விமானப்படை வீரர் தற்கொலை - வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 02:39.30 PM GMT ]
உகண விமானப்பைடை முகாமில் கடமையாற்றிய வந்த வீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விமான ஓடுத்தளத்தின் பாதுகாப்புக்கான பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரே இவ்வாறு இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சம்பத் மனரங்கன என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, துப்பாக்கி ஒன்றினையும் அதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகளையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இன்று மாலை வீட்டு உரிமையாளர்கள் தமது வளவிற்குள் சென்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அதனுள் இருந்து மர்மப் பொருள் ஒன்று தென்படுவதை கண்டு அருகில் இருந்த இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வாகரை 233ஆவது படைப்பிரிவினர் குறித்த இடத்திற்கு சென்று கிணற்றினுள் காணப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது ரி.56-1 ரக துப்பாக்கி-01, ரவைக்கூடு-2, மற்றும் 30 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgvz.html

பொதுபல சேனாவின் பிக்குமாரை பாதுகாக்க பொலிஸார் தொடர்ந்தும் முயற்சி
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 02:54.56 PM GMT ]
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமைச்சரவைக்குள் பலாத்காரமாக நுழைந்ததாக கூறப்படும் பொதுபல சேனாவின் பிக்குகளை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரரைத் தேடி, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அலுவலகத்தினுள் பொதுபல சேனா அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொதுபல சேனாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பொதுபல சேனாவின் பிக்குமார் அலுவலகத்தினுள் நுழைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தொடர்பில் இன்னும் விசாரணை நடாத்தி வருவதாகவும், இதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் எனவும் கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் கோட்டை மஜிஸ்த்ரேட் நீதிபதி திலினி கமகேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பிலான வழக்கு விசாரணை ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgv0.html

திருமலை கடற்படை முகாமில் 4 நெடுந்தீவுக் குதிரைகள்: மீளத் தருமாறு ஐங்கரநேசன் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 03:23.33 PM GMT ]
நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நான்கு குதிரைகளும் திருகோணமலைக் கடற்படை முகாமில் உள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் இருந்து படையினரால் குதிரைகள் கடத்தப்படுவதாகவும், அண்மையில் 4 குதிரைகள் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக பொதுமக்களால் முறைப்பாடும் செய்யப்பட்டது.
ஆனால், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவில்லையென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்தனர்.
அங்கு, மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பிரதேச சபை அதிகாரிகள், கடற்படை முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரட்ண மற்றும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,
கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நான்கு குதிரைகளும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் வாழுகின்ற போனி ரக குதிரைகள் போர்த்துக்கேயரால் கொண்டு வரப்பட்டவை. எனினும் பெருநிலப் பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நெடுந்தீவில் பன்னெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு அக இனக்கலப்பில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக வடக்குக்கே உரித்தான தனித்துவமான ஒரு ரகமாகவும், வடக்கின் மரபுரிமைகளில் ஒன்றாககவும் இன்று இந்தக் குதிரைகள் மாறி உள்ளன.
எனினும் ஏறத்தாழ 500 குதிரைகள் மட்டுமே வாழ்வதால் இவற்றை உரியமுறையில் பாதுகாக்கத் தவறினால் விரைவிலேயே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனைப் பலரும் சுட்டிக்காட்டியதன் காரணமாக இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நெடுந்தீவில் குதிரைகளுக்கு 537 ஹெக்டெயர் பரப்பளவில் சரணாலயம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது.
இதற்கான அனுமதிகோரி எமது முதலமைச்சரிடம் வடமாகாணக் காணி ஆணையாளர் கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஒருபுறம் குதிரைகளைப் பாதுகாப்பதற்காகச் சரணாலயத்துக்கு அனுமதியைக் கோரிவிட்டு இன்னொருபுறம் கடற்படையினர் குதிரைகளைப் பிடித்து செல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடானது.
இது கண்டிக்கத்தக்கது. திருகோணமலை கடற்படைமுகாமில் குதிரை ஒன்று தனிமையில் வாடுவதாகவும் அதற்குத் துணையாகவே நெடுந்தீவிலிருந்து குதிரைகள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தனது மேலதிகாரிகளின் வேண்டுதலின் பேரில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் தாம் இதற்கு அனுமதித்தார் எனவும் நெடுந்தீவு கடற்படைமுகாம் அதிகாரி என்னிடம் தெரிவித்துள்ளார்.
தவறான முன்னுதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்துவிடக்கூடாது என்பதால் எடுத்துச்சென்ற குதிரைகளை மீளவும் நெடுந்தீவிலேயே கொண்டுவந்து விட்டுவிடுமாறு திருகோணமலைக் கடற்படை உயர் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம்.
கடற்படையினர் தங்களுக்குக் குதிரைகள் தேவையென்று கருதினால், இலங்கைக் காவல்துறையில் ஒரு பிரிவாகவுள்ள குதிரைப்படைப் பிரிவில் இருந்து இளைப்பாறும் குதிரைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgv1.html
இந்தியாவில் உளவு பார்த்த இலங்கையர் கைது: பழைய செய்தி என்கிறது பாகிஸ்தான்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 03:52.00 PM GMT ]
தமது நாட்டுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
குறித்த கைது விடயம் ஏற்கனவே இடம்பெற்ற சம்பவத்தை மீண்டும் புதுப்பிக்கும் செயலாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட சில இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த பழைய செய்தியையே இந்தியா மீண்டும் வெளியிட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவு பேச்சாளர் தஸ்னிம் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. எனவே நேற்றைய சம்பவத்தை பழைய வகுதிக்குள்ளேயே உள்ளடக்கவுள்ளதாக அஸ்லம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி நேற்று இலங்கையரான அருண் செல்வராஜா என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கையில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgv2.html

Geen opmerkingen:

Een reactie posten