உடுவில் மல்வம் பங்குத்தந்தை அன்ரன் ஸ்டீபன் கடந்த புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவால் கடுமையான தொனியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அருட்தந்தை அன்ரன் ஸ்டீபன் அச்சுறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம் அவர் வெளியிட்ட உயிர்ப்பதிவு என்ற கவிதை நூலே என்று சொல்லப்படுகின்றது.
முன்னதாக உயிர்ப்பதிவு நூல் கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்ட பாடசாலைகளில் நூலகத்தில் வாசிப்பிற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலை அதிபர்கள், இராணுவ புலனாய்வு துறையால் அச்சுறுத்தப்பட்டு உயிர்ப்பதிவு நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
காலத்தின் சாட்சியமாக விளங்குவது இலக்கியங்கள் என்று சொல்லப்படும் நிலையில், அருட்தந்தை ஸ்டீபன் வெளியிட்ட உயிர்ப்பதிவு கவிதை நூல் தான் வாழந்த மக்களையும் மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.
ஒரு நேர்மையான உண்மையான படைப்பாளி செய்திருக்கிற காலக் கடமைக்காக இலங்கை அரசாங்கத்தில் ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான மிக மோசமான அடக்குமுறையின் விளைவாக உயிர்ப்பதிவு நூலின் ஆசிரியரான அருட்தந்தை அன்ரன் ஸ்டீபன் மிகவும் மதிக்கத்தக்க ஆயர் இல்லத்திலும் அதிபர்கள் பாடசாலைகளில் வைத்தும் புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை ஆயர் இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவால் துருவிதுருவி விசாரிக்கப்பட்டுள்ளார்.
உயிர்ப்பதிவு நூல் இக்காலத்தில் தேவையற்றதான வெளியீடு என்ற தொனியிலான போக்கில்தான் அருட்தந்தை மீதான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச விசாரணையொன்று இலங்கை அரசின் மானுடத்துக்கு எதிரான போர்க்குற்றம் மற்றும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை தொடர்பாக நடைபெற்றுவரும் நிலையில் இலங்கையில் ஒரு நூலைக்கூட வெளியிடமுடியாத, அதை வாசிக்க முடியாத, ஒருவர் தன் கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியாத அடக்கு முறையின் வெளிப்பாடாக அருட்தந்தை ஸ்டீபன் மீதான பயங்கரவாத தடுப்புப்பிரிவின் விசாரணை சர்வதேசத்துக்கு சேதி சொல்லி நிற்கின்றது.
இத்தகைய சூழலில் சாட்சியங்களுக்கு இலங்கையில் எந்தவித உத்தரவாதங்களும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
இங்கே வெளிப்படுகின்ற ஜனநாயகத்துக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செய்தி ஒரு கருத்தை தன் நூல் வாயிலாக வெளியிட்ட ஒரு படைப்பாளி மற்றும் ஒரு சமுக மதிப்புள்ள மதகுரு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
அடுத்தது மக்களால் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரனால் வழங்கப்பட்ட ஒரு படைப்பாளியின் நூல் வாசகர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
உயிர்ப்பதிவு நூல் வெளியீடு அதன் பின்னதாக நடந்திருக்ககூடிய சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை முகத்தை மீண்டும் சர்வதேசத்தின் முன் அம்பலப்படுத்துகின்றது.
வத்திக்கான் வரையும் ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை வரையும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை செய்தி பதிவாக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq5.html
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மொனோரெய்ல்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 04:16.37 PM GMT ]
இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது.
மொனோரெய்ல் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு தெரிவித்துள்ளது
கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3 பில்லியன் டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் முதல் கட்ட நிதிகளை வழங்கவுள்ளது.
இதன்படி ஒருகிலோமீற்றர் மொனோரெய்ல் திட்டத்தை அமைக்க 57 மில்லியன் டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மாலபோ ஊடாக ரொபட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்ல, தேசிய வைத்தியசாலை, உலக வர்த்தக மையம், கொழும்பு கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் மற்றும் ஒரு மொனோரெய்ல் திட்டம் கொள்ளுப்பிட்டியில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கும் அமைக்கப்படவுள்ளது.
இது பின்னர் கொட்டாஞ்சேனைக்கும் களனிக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைய 8 வருடங்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq6.html
Geen opmerkingen:
Een reactie posten