தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

எதிர்க்கட்சியிலிருந்து எதையும் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாது!- பிரதியமைச்சர் முரளிதரன்

ஜனாதிபதி இஷ்டம் போல் செலவு! அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:38.20 PM GMT ]
அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைச் சிக்கனப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக ஜனாதிபதியின் நாளாந்த செலவுகள் மற்றும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனை திசை திருப்பும் நோக்கில் தற்போது அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
“அரச நிதியை சிக்கனப்படுத்தலும், முகாமைத்துவப்படுத்தலும்” என்ற தலைப்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அழைத்துச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செலவு ஊதாரித்தனமாக இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுங்கட்சிக்குள் சலசலப்புகள் தோன்றியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlr2.html

எதிர்க்கட்சியிலிருந்து எதையும் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாது!- பிரதியமைச்சர் முரளிதரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:48.54 PM GMT ]
நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக இருக்கும்போதே எமது சமூகத்தினை கட்டியெழுப்பமுடியும். எதிர்க்கட்சியிலிருந்து அறிக்கைகள் விடுவதனால் எதையும் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் விசேட நிதியொதுக்கீட்டில் வழங்கப்படவுள்ள நிதிகளின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அபிவிருத்தி என்பது கட்டுமானம்,வாழ்வாதாரம் இரண்டிலும் ஏற்படவேண்டும்.இன்று கட்டுமான அபிவிருத்திகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது வாழ்வாதார அபிவிருத்தியை மேற்கொண்டு வருகின்றோம்.
கட்டுமானம், வாழ்வாதாரம் இரண்டினையும் சரிசமமாக கொண்டு செல்லும் போதே அந்த நாடு முன்னேற்றமடைந்த நாடாக கருதமுடியும்.
நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக இருக்கும் போதே எமது சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும். எதிர்த்தரப்பு அரசியல் செய்வதால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே அபிவிருத்திகளைச் செய்யமுடியும்.
வாழ்வின் எழுச்சிமூலம் வாழ்வாதார அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் கீழ் இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 16ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதாரம் அதிகரிக்கப்படும் போது மாவட்டத்தின் வறுமை நிலைமை குறையும்.
கடந்த 30 வருட கால யுத்த சூழ்நிலையினால் அழிந்த பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று வடக்கு, கிழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானுமே தமிழ் அமைச்சர்களாக இருக்கின்றோம். இன்னும் பல தமிழ் அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.
இன்னும் 10 வருடங்களில் படுவான்கரைப் பிரதேசத்தை மட்டக்களப்பு நகர் போன்று மாற்றியமைப்பேன். அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். படுவான்கரைப் பிரதேசத்தில் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு வழங்கப்படுகின்றது.
மேலும், படுவான்கரை மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி வருகின்றேன். அம்பாறையிலுள்ள 02 குளங்களை புனரமைத்து அந்தக் குளங்களினூடாக இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தனிக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவியையும் நான் வழங்கியுள்ளேன்.
இவற்றையெல்லாம் அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே செய்ய முடியும். எதிர்த்தரப்பிலிருந்து அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நான் ஏற்படுத்தித் தருவேன். மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் கல்வியை ஒரு பிரசாரமாக முன்னெடு;த்து தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகம் கல்வியில் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. நாங்கள் பௌதீக வளங்களின் வளர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு பல்கலைக்கழகம் வளர்வதாக சொல்ல முடியாது.
இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் தர வகுப்பில் சித்திபெற்று யாரும் வேளியேறுவதில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்டோர் முதல் வகுப்பு தரத்தில் சித்திபெற்று வெளியேறுகின்றனர். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அந்த நிலையில்லை.
இதற்கு காரணம் விரிவுரையாளர்களின் இயலாமையா அல்லது தங்களை விட யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணப்பாடா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி சமூகம் சிந்திக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்து செல்லுமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற எந்த தமிழனும் உயர் பதவிகளுக்கு வரமுடியாத நிலையே ஏற்படும்.
இதனை நான் இனவாத கண்ணோட்டத்துடன் இங்கு கூறவில்லை. எமது மக்களின் நிலைமைகளை இங்குள்ள கற்றறிந்த சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன். எமது சமூகம் இது தொடர்பில் விழிப்படைய வேண்டும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களின் கல்விக்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வாகரையில் விஞ்ஞான தொழில்நுட்பப் பாடசாலையொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், பொது நிறுவனங்கள் அனைத்தும் கல்வியை முன்னேற்றப் பாடுபடுவதுடன், அதற்கான பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
அபிவிருத்திகள் 02 வகைப்படும். ஒன்று கட்டுமான அபிவிருத்தி. மற்றையது தனி நபர் அபிவிருத்தியாகும். இதில் போதியளவு உட்கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட குடும்பங்களின் மாத வருமானத்தை அதிகரித்து தனி நபர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.
அந்த வகையில், 'வாழ்வின் எழுச்சி' திட்டத்தினூடாக தனி நபர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யத் தேவையான வசதி வாய்ப்புக்கள் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உட்கட்டுமான அபிவிருத்தியும் தனி நபர் அபிவிருத்தியும் ஒன்றாக முன்னேற்றமடையும் போதே, நாடு செழிப்படையும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்களுக்கு 262 இலட்சம் ரூபாய் வழங்கினேன். அதனூடாக பெண்களின் வாழ்வாதரம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் இழந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlr3.html

Geen opmerkingen:

Een reactie posten