[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:13.05 AM GMT ] [ பி.பி.சி ]
எல்எஸ்ஈ என்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரான டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் குடிவரவு குடியகல்வுதுறை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோகண கூறினார்.
இலங்கையில் நடக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான வீசாவுடன் தான் அவர் இங்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் மட்டக்களப்பு பிரதேசத்துக்குச் சென்று, சிலரை ஓரிடத்துக்கு அழைத்து இராணுவத்தினர் தொடர்பான சில தகவல்களை கேட்டிருக்கின்றார். அங்கு இராணுவ கெடுபிடிகள் எப்படி இருக்கின்றன என்றெல்லாம் அவர் கேட்டிருக்கின்றார். என்றார் அஜித் ரோகண.
அவர் வந்திருக்கின்ற வீசாவின்படி, அவருக்கு அதற்கான அனுமதி கிடையாது. குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றும் கூறினார் பொலிஸ் பேச்சாளர்.
டாக்டர் வேணுகோபால் கடந்த 24ம் திகதி இலங்கைக்கு அவர் வந்திருந்த போது, கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியையும் பொலிஸ் பேச்சாளர் மறுத்தார்.
தெற்காசிய அரசியல் விவகாரம், அபிவிருத்தி, மோதல் நிவர்த்தி உள்ளிட்ட விடயங்களே டாக்டர் ராஜேஷ் வேணுகோபால் தேர்ச்சி பெற்ற பாடப்பரப்புகள் என்று அவரது டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜேஷ் வேணுகோபால், வறுமை ஒழிப்பு ஆய்வு தொடர்பான சீபா (CEPA) என்ற இலங்கை நிறுவனத்தின் கொழும்பில் நடக்கும் வருடாந்த மாநாட்டில் மோதல் நிவர்த்தி தொடர்பில் இன்று திங்கட்கிழமை உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlr4.html
இலங்கையுடன் இந்தியா உறவை பேணவேண்டியது அவசியம்!- வெங்கையா நாயுடு
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:21.23 AM GMT ]
இந்திய ஊடகம் ஒன்றிடம் இந்தக் கருத்தை அவர் நேற்று தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவு குறித்த கேட்ட போது இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற முக்கிய விடயங்களுக்காவது இந்தியா, இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlr5.html
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!– ஆஸி. குடிவரவு அமைச்சர் மொரிசன்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 12:29.50 AM GMT ]
இத்தகைய புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இந்தோனேஷியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை முதற்தடவையாக 10,000 ஐ விட குறைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவுஸ்ரேலியா செய்தி சேவை ஒன்றுக்கு இவ்வாறு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து தெரிவித்தாவது,
அவுஸ்திரேலியாவிற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளதை புகலிடக் கோரிக்கையாளர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அந்தத் துறையில் இருந்து ஆட்கடத்தல்காரர்கள் விலகி வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலமாக தான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள தற்காலிக விசாவிற்கு ஆதரவு கிடைத்தமை பெரும் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களிலும் தான் அறிமுகப் படுத்திய B v e எனப்படும் தற்காலிக விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு செனட் சபையில் ஆதரவு கிடைக்கும் எனவும் குடிவரவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
தொழிற்கட்சியையும் பசுமைக் கட்சியையும் சேர்ந்தவர்கள் தற்காலிக பாதுகாப்பு விசாவை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் ஆட்சேபித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
தாம் தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அதில் அகதிகள் விடயம் மிகவும் முக்கியமானது.
தற்காலிக விசாவை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தலில் கிடைத்த ஆணையாக தாம் காணும் விடயத்தை அமுலாக்குவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளதென அவர் தெரிவித்தார்.
இவை அனைத்தும் எமது மக்களுக்கு கொடுத்த ஆணைப்படியே செய்கின்றோம்.
ஆகவே எமது அகதிக் கொள்கை மிக சிறந்த கொள்கையாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார். .
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlr6.html
Geen opmerkingen:
Een reactie posten