ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 27வது அமர்வின்போது, சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சில அரச சார்பற்ற அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இவை சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த குற்றச்சாட்டு ஆவணங்களில் ஆசியன் சட்ட மூலவள நிலையம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
அதன் குற்றச்சாட்டில் அரசாங்கப் படையினரின் கண்காணிப்பின்கீழ் காணாமல் போதல் உட்பட்ட விடயங்கள் அடங்கியுள்ளன.
அத்துடன் இலங்கையில் பொலிஸ் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சட்டவிரோதக் கொலைகள், 18வது அரசியல் அமைப்பு திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் என்பனவும் ஆசியன் சட்டமூலவள நிலைய ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பசுமை தாயகம் என்ற அமைப்பு தமது பரிந்துரை ஒன்றில் பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஸ் டிஸ்குலோசர் அன்ட் பாரிங் சேவைக்கு ஒத்த சேவை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளது.
இதன்கீழ் ஏனைய நாடுகளில் மனிதக் கடத்தல்கள் இடம்பெறும் போது அதற்கு எதிரான கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அரசியல்வாதிகள் இந்த மனித கடத்தல்களில் ஈடுபடுவதை அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho7.html
Geen opmerkingen:
Een reactie posten