[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:52.50 AM GMT ]
சட்டமா அதிபர் அதிபருடன் கலந்துரையாடிய விடயங்களை, உடல்நலக்குறைவால் கூறமுடியாதிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற சட்டமா அதிபர், காலையில் யாழ்.நீதிமன்றம் மற்றும் யாழ். பொதுநூலகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தார்.
யாழ். நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை சந்தித்தபோது,
குற்றப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மொழி பெயர்ப்பதில் சிக்கல் நிலைகள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குகள் காலதாமதமாவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.
அதாவது, பொலிஸாரால் தாக்கல் செய்யப்படும் குற்றப் பத்திரங்கள் சிங்களத்தில் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் குற்றப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மொழி பெயர்ப்பதற்கான மொழி பெயர்ப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்தி- அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவார்கள்!- யாழில் சட்ட மா அதிபர் தெரிவிப்பு
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis2.html
ஷிராணியின் வங்கி கணக்கு விபரங்களுக்கு 4 லட்சத்து 72 ஆயிரத்து 200 ரூபா அமெரிக்க டொலர் பேரம்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:12.48 AM GMT ]
இது குறித்து விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது வங்கியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கருத்து முன்வைத்தார்.
நீதிமன்றம் கேட்கும் தரவுகளை வழங்க கணனி செயற்பாடு ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.
எனவே முன்னாள் பிரதம நீதியரசர் 472, 200 அமெரிக்க டொலரை செலுத்த இயலுமாயின் தரவுகளை வழங்க முடியுமென வங்கியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் மத்திய வங்கி தனியார் வங்கி பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் நீதியரசர் வங்கியில் வைத்திருந்த விசேட நடமாடும் கணக்குகள் இரண்டு தொடர்பான தகவல்களை மூன்று வருடங்கள் மறைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றசாட்டு தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு தாக்கல் செய்த வழக்கு மீது விசாரணை இடம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis1.html
வெளிநாடுகளில் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது மறைக்கப்படுகிறது: ரஞ்சன் ராமநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:04.18 AM GMT ]
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதன் அதிகாரிகளும் பொறுப்புக் கூறவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்று செல்லும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாவதில்லை.
ஓரிரு சம்பவங்கள் பற்றிய செய்திகளே வெளியாகின்றன. எவ்வாறாயினும் இப்படியான பல சம்பவங்கள் நடக்கின்றன.
வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்லும் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது முடிவோ ஆரம்பமோ இல்லை.
சவூதி மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இப்படியான பல சம்பவங்கள் நடக்கின்றன.
பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளான மற்றும் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களில் 40 முதல் 50 வரையான பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனால், இலங்கை பெண்களை வீட்டுப் பணிப்பெண் வேலைகளுக்கு அனுப்பாது, பயிற்சிகளை வழங்கி ஆடை தைக்கும் தொழிலுக்கு மாத்திரம் அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி செய்தால், தொழிலாளர் சட்டங்கள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகளின் செல்வந்தர்கள் பாலியல் வேட்கைகளுக்கும் அடக்குமுறைகளுக்கு வெளிநாட்டில் இருந்து செல்லும் பெண்கள் உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், சூடான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவதை நிறுத்தியுள்ளன.
எனினும், வெளிநாட்டு அந்நிய செலாவணிக்காக இலங்கையில் உள்ள அப்பாவி தாய்மார், அக்கா, தங்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவது மிகப் பெரிய பிரச்சினை எனவும் ரஞ்சன் ராமாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis0.html
Geen opmerkingen:
Een reactie posten