தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

லண்டனில் உள்ள டியூப் ஸ்டேஷனில் ரகசியப் பொலிசார்: கடும் பாதுகாப்பு அதிகரிப்பு !

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பலம்பொருந்திய தீவிரவாத அமைப்பாக, உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, தற்போது பிரித்தானியாவுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. லண்டனில் தாக்குதல் நடத்தலாம் என்று பிரித்தானிய உளவுத்துறையினர் பிரதமர் டேவிட் கமரூனை எச்சரித்துள்ளார்கள். இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் தொடரூந்து நிலையங்கள், பஸ் தரிப்பு இடங்கள் மற்றும் ஷாப்பிங் காம்பிளெக்ஸ் என்று அனைத்து இடங்களிலும் இரகசியப் பொலிசார் தற்போது குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
சாதாரன சீருடையில் அவர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதேவேளை, பொலிசாரும் ஆயுதம் தாங்கிய காவல் பிரிவினரும் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். மக்களை அதிகம் பீதியடையச் செய்யாமல் இருக்கவே இரகசியப் பொலிசாரை பிரித்தானியா களமிறக்கியுள்ளது. இதேவேளை முன் எப்பொழும் இல்லாதவாறு பல தொலைபேசிகளையும், மின்னஞ்சல்களையும், மற்றும் இன்ரர் நெட் உரையாடலையும் ஸ்காட்லன் யாட் பொலிசார், ஊடறுத்து கேட்டுவருவதாக அயர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து, பிரித்தானியாவுக்கு வரும் அனைத்து தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் , மற்றும் இன்ரர் நெட் பரிமாற்றங்கள் என்பன தற்போது இரகசியமாக ஒட்டுக்கோட்க்கப்பட்டு வருகிறது. அத்தோடு செய்மதி தொடர்புகளை லண்டனில் எவராவது பாவித்தால், அதனை ஒட்டுக்கோட்க்கும் வசதிகளையும் MI6 புலனாய்வுப் பிரிவினர் முடிக்கிவிட்டுள்ளார்கள் என்று மேலும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பிரித்தானியா படு விழிப்புடன் இருக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten