தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

பயணிகள் விமானம் லிபிய தீவிரவாதிகள் கைகளில் சிக்கியது:

லிபியா நாட்டில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள், பல நகரங்களை படிப்படியாக கைப்பற்றி தற்போது தலைநகர் திரிபோலியையும் பிடித்துவிட்டார்கள். திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையமும் அவர்கள் கைகளில் வீழ்ந்துவிட்டது. அங்கே பல விமானங்கள் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ள போதும், சில பயணிகள் விமானம் தீவிரவாதிகளால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் பெரும் தலைவலியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை, பின்லேடன் ஆட்கள் பயணிகள் விமானத்தை பயன்படுத்தியே தகர்த்தார்கள்.

அதுபோல இந்த பயணிகள் விமானத்தை பயன்படுத்தி லிபிய தீவிரவாதிகள், அமெரிக்கா அல்லது பிரிட்டன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. லிபியாவில் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டு அன் நாட்டு அதிபர் கஃடாபியை ஆட்சியில் இருந்து கவிழ்த்தது அமெரிக்கா. பின்னர் அன் நாட்டில் இதுவரை அமைதி திரும்பவில்லை. அரசாங்கம் ஒன்றை லிபியாவில் அமைத்து, சிவில் நிர்வாகத்தை கொண்டுவருவதாக அமெரிக்கா கூறிவந்தது. ஆனால் அங்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் தமது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதேவேளை சிரியா, ஈராக் போல அங்கேயும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துவிட்டது.
இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளால் தற்சமயம் எதுவும் செய்ய முடியவில்லை. பயணிகள் விமானங்களை கையில் வைத்துள்ள இந்த தீவிரவாதிகள் எதனையும் செய்ய முற்படுவார்கள் என்று பல நாடுகள் தற்போது அஞ்சுகிறது.





Geen opmerkingen:

Een reactie posten