[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 01:51.42 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டு வருகின்றது.
சுதந்திரக் கட்சியில் சிரேஸ்ட உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றின் மூலம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு கோரியுள்ளனர்.
கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இளைஞர் சமூதாயத்தை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி போன்ற கட்சிகளுடன் இளைஞர், யுவதிகள் இணைவதனை கட்டுப்படுத்த போதியளவு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இளைஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUitz.html
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சர்வதேச விசாரணையை ஓரங்கட்டும்: ஜப்பான் நம்பிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:00.30 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகள் தொடர்பான விடயத்தை செயலிழக்கச் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் செவ்வியில் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நேரடி கேள்வியை ஜப்பான் பிரதமர் தவிர்த்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்துக்காக காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை விஸ்தரித்துள்ளமை உட்பட தீர்க்கமான விடயங்களில் முனைப்பு காட்டுவதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முனைப்புகள் மூலம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை செயலிழக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்காக சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஜப்பான் உதவிகளை தொடரும் என்றும் அபே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதானத்துக்காக ஜப்பான் நீண்டகாலமாக செயற்பட்டு வருகிறது.
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இதற்காக பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அபே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் அபேயும் அவரது பாரியார் அக்கி அபேயும் இன்று பகல் 12.45 அளவில் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கும் அவர் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்வதுடன் நாளை முற்பகல் 9 மணிக்கு தமது பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
1957 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமராக இன்று விஜயம் மேற்கொள்ளும் அபேயின் பாட்டனார் நௌசுகி கேசி கருதப்படுகிறார்.
இலங்கையை வந்தடைந்த ஜப்பான் பிரதமர்
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு விசேட விமானம் மூலம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அவரது பாரியார் அக்கி அபே இன்று மதியம் ஒரு மணியளவில் இலங்கை வந்தனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜப்பானியப் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
பின்னர் அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் வரவேற்று அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவர்.
இந்தச் சந்திப்பு முடிடைவடைந்த பின்னர் ஜப்பானியப் பிரதமர் தமது பாரியாருடன் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார்.
இதன் பின்னர் இன்றிரவு சினமன் ஹோட்டலில் இடம்பெறும் விசேட வர்த்தக கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார். இதன்போது பல வர்த்தக ஒப்பந்தங்களிலும் அவர் கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்தன.
ஜப்பானியப் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit0.html
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் படையினருக்கு இலங்கையில் இராணுவ பயிற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 02:12.02 AM GMT ]
இந்த பயிற்சிகள் கொடுப்பனவு மற்றும் இலவசம் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், ருவண்டா, செனகல், சிங்கப்பூர், சூடான், வியட்நாம், துருக்கி ஆகிய நாடுகளின் இராணுவத்தினருக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தோனேசியா, மாலைத்தீவு, ஓமான், போன்ற நாடுகளின் இராணுவத்தினருக்கு கொடுப்பனவு அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் மீனவ படகு இந்திய கடற்படையால் கைப்பற்றல்
இலங்கையின் மீன்பிடி படகு ஒன்று 5 மீனவர்களுடன் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இந்திய கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட 300 கிலோகிராம் நிறையுடைய மீன்கள் சகிதம் இந்த படகு கைப்பற்றப்பட்டது.
சென்னைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்த படகை, இந்திய கப்பலான ராஜ்வாஜ் கடந்த நான்காம் திகதி கைப்பற்றியது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 30 படகுகளுடன் 300 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit1.html
Geen opmerkingen:
Een reactie posten