அவுஸ்திரேலியாவில் நிபந்தனை வீசா வழங்கப்பட்டு அது காலாவதியாகி சுமார் 2 வருடங்களாக வீசா அனுமதியின்றி இருக்கின்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒரு தொகுதியினருக்கு இன்று குடிவரவு திணைக்களத்தால் மேலும் 1 வருடத்துக்கான அதே நிபந்தனையுடனான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளார்களின் வருகை சென்ற ஆண்டுகளில் அதிகரித்தமையால் அவுஸ்திரேலியா அரசாங்கம் தமது கடலோர கதவுகளை மெது மெதுவாக அடைக்கத் தொடங்கியது.
அந்தவகையில் கடந்த 2012 ம் ஆண்டு ஆவனி மாதம் 14ம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது ச்டதையும் தனது அகதி கொள்கையிலும் பாரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது.
அதன் பிரகாரம் வீசா இல்லாமல் படகு மூலம் வருபவர்களுக்கு நிபந்தனையுடனான விசாவும் வழங்கப்பட்டு அவர்களை தமது அண்மித்த தீவுகளுக்கும் அனுப்பி வைத்தது. அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டு சரியான அகதி என ஏற்றுக் கொள்ளப்பட்டால் புகலிடம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.
ஆனல் முதல் கட்டமாக நவுரு தீவில் அனுப்பப்பட்டவர்களுக்கு மூன்று கட்ட விசாரணை முடிவடைந்து அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வீசா வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.
ஆனால் மூன்றாம் தரப்பு நாடுகளில் விசாரிப்பதாக சட்டம் நிறைவேற்றி அதன்படி அவர்களுக்கு விசாரணை முடிவடைந்தும் அவர்களையும் ஏமாற்றி அவர்களுக்கும் இந்த நிபந்தனை வீசா வழங்கி தற்போது சமூகத்தில் இணைத்துள்ளது.
இது சம்பந்தமாக இவர்களுக்கு யாராவது உதவுவார்களா இல்லை இவர்கள் இப்படியே அடிமை வாழ்க்கை தானா?
இந்த அகதிகள் விடயத்தில் அரசியல் நடக்கின்றதா இல்லை பழி வாங்கல் சம்பவம் ஏதும் நடக்கின்றதா என்பது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
இவற்றில் குறைந்தது 6 மாத கால வீசாவும் ஒரு சிலருக்கு 1 வருட வீசாவும் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த வீசாக்கள் காலாவதியாகி சுமார் 2 வருடங்களும் வீசா ஒன்றும் இல்லாமல் இருக்கின்றவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப் பட்ட வீசாவனது வெறுமனே ஒரு செல்லத் தக்க வீசா என்பதுதான் மிகவும் பொருத்தமானது.
ஏனென்றால் இந்த B .V.E என அழைக்கபபடும் விீசாவனது தொழில் செய்யவோ படிக்கவோ முடியாது அடிமைகள் போன்று இருக்கலாம் என்பதே இதன் கருத்து.
ஆனால் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர் வருகின்ற காலங்களில் இந்த வீசா நடைமுறையில் மாற்றம் வரும் எமக்கென்று ஒரு நல்ல காலம் பிறக்கும் என்றும்.
இன்று குடிவரவு திணைக்களத்தால் மேலும் 1 வருடத்துக்கான அதே நிபந்தனையுடனான வீசாக்கள் ஒரு தொகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையானது புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அகதிகள் விடயத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கவனம் செலுத்துமா?' இல்லை அடுத்த ஆண்டு இந்த ஆண்டு மரணம் அடைந்தவர்களை விட பல மடங்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்?
எது எவ்வாறாயினும் மன ரீதியான தாக்கத்தில் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் தள்ளபபட்டுள்ளமை மிகவும் தெளிவான உண்மையாக உள்ளது.
இந்தநிலை தொடருமானால் வாழ்வதற்கு புகலிடம் தேடி வந்த தஞ்சக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் மன நோயாளியாக்கிய பெருமை பிரதமர் அபொட் அவர்களையும் திரு மொரிசனையுமே சாரும்.
அவுஸ்திரேலியா அகதிகளின் நிலை மனிதனாகப் பிறந்த எவனுக்கும் வரக் கூடாது, அவுஸ்திரேலியா வருபவர்கள் இதுவே உங்களது இறுதி பயணம் என்பதை மனதில் கொண்டு தரகர்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjw7.html
Geen opmerkingen:
Een reactie posten