இந்தியாவில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த பாக்கிஸ்தான் உளவாளி இவர் தான்(புகைப்படம்) !
[ Sep 12, 2014 12:07:47 PM | வாசித்தோர் : 6215 ]
பாக்கிஸ்தானிற்காக உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் பல முக்கிய தகவல்களை இந்திய தேசிய புலனாய்வு பணியகத்திடம் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் இணைந்து பணியாற்றிய செல்வராஜான் அருண் என்ற இலங்கை தமிழர் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கொச்சின் துறைமுகம்போன்றவற்றின் வரைபடங்களை பாகிஸ்தானிற்க்கு வழங்கியுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சிகல்லூரி போன்றவற்றின் விபரங்களையும் இவர் வழங்கியுள்ளார். எனினும் விசாகப்பட்டினம் துறைமுகம் குறித்த தகவல்களை அவர் இன்னமும் கையளிக்கவில்லை எனவும், தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறிப்பிட்ட சந்தேகநபரை ஹைதராபாத் பொலிஸார் தங்களுடைய பொறுப்பில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதியை கோரியுள்ளனர்.அவர் அங்கும் வந்துள்ளார் அதனால் அவர் அங்கு என்ன செய்தார் என்பதை அறிய விரும்புகிறோம் என ஹைதராபாத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் அவரிடம், விசாகப்பட்டினம் கடற்படைத்தளம், நீர்மூழ்கிகள் போன்ற விடயங்களை வழங்குமாறு கேட்டதாகஅறிகிறோம்,ஆனால் அவர் இன்னும் இந்த விடயத்தை கையளிக்கவில்லை, ஆனால் இந்தப்பகுதிகளுக்கு சென்றுள்ளார் தகவல்களை சேகரித்துள்ளார் என்றும் ஹைதராபாத் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலுள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணியாற்றிய சீத்திக் என்ற பாக்கிஸ்தானியருக்கு அருண் தகவல்களை வழங்கி வந்ததாகவும்,கடந்த மூன்று வருடங்களில் முக்கிய தகவல்களை வழங்குவதற்காக பாக்கிஸ்தான் அருணிற்க்கு 3கோடி வரை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.athirvu.com/newsdetail/982.htmlபிரித்தானியாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை !
[ Sep 12, 2014 12:27:21 PM | வாசித்தோர் : 2605 ]
நாட்டின் அரசியல் சூழ்நிலை, குறிப்பாக கிழக்கின் அரசியல் நிலைமை குறித்து பேசப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கையை வலிறுயுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/983.htmlபொட்டு அம்மான் பிடிபட்ட கதைக்கு பின்னால் பாரிய மர்மம் ஒளிந்துள்ளது !
[ Sep 12, 2014 01:12:48 PM | வாசித்தோர் : 7355 ]
ஆனால் இச்செய்தி ஊடறுப்பாளர்களால் பிரசுரிக்கப்பட்ட மறுகணமே, இந்தியாவில் இருந்து இயங்கும் பிரபல்யமான தமிழ் இணையம் ஒன்று இச்செய்தியை lankann.com வெளியிட்டுள்ளதாக ஆதாரம் காட்டி வெளியிட்டு விட்டது. இதன் காரணமாகவே இச் செய்தி சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு சென்றுள்ளது. இதன் பின்னர் பல இணையத்தளங்கள் இச்செய்தியை வெளியிட்டார்கள். இந்த நேரத்தில் இவ்வாறு ஒரு செய்தியை திட்டமிட்டவகையில் ஏன் வெளியிடவேண்டும் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இச்செய்திக்கான பதிலையும் இலங்கை அரசு உடனே வழங்கியுள்ளது. குறித்த இச்செய்தி வெளியான உடனே இலங்கை அரசு இவ்வாறு அறிவிக்க என்ன காரணம் ? என்பதும் சந்தேகமே.
இதேவேளை இச்செய்தியை பயன்படுத்தி, சில தமிழ் இணையத்தளங்கள் தம்மை பிரபல்யமாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்கள். இதனூடாக சில புதிய இணையத்தளங்களை அறிமுகப்படுத்தவும் இவர்கள், முனைந்துள்ளார்கள் என்பதும் வருந்தத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/984.html
Geen opmerkingen:
Een reactie posten