[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:08.56 AM GMT ]
அமெரிக்காவில் இடம்பெறும் உள்ளூராட்சி (Local Governance) தொடர்பான சர்வதேச தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் (International Leadership Program) பங்குபற்றுவதற்காக அவர் இன்று காலை பயணமானார்.
அங்கு மூன்று வாரம் வரை தங்கியிருந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfs6.html
பெண்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன: சந்திராணி பண்டார
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:16.15 AM GMT ]
கூடிய விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் எனவும் நாட்டின் சனத் தொகையில் 52 வீதமாக இருக்கும் பெண்களுக்கு இன்றைய அரசாங்கம் எந்த நன்மைகளையும் செய்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகள், விமான நிலையங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்ட போதிலும் 52 வீதமாக இருக்கும் பெண்களுக்கு எதனையும் செய்வதில்லை.
அரசாங்கம் ஆரம்பித்த தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உக்கிரமடைந்துள்ளது. பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பெண்களின் வாழ்க்கை ஆபத்திற்குள் சென்றுள்ளது.
விரைவில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்போம்.
அப்போது பெண்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவோம் எனவும் சந்திராணி பண்டார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfs7.html
மனைவியை காரில் கைவிட்டு தப்பியோடிய கணவன்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:18.12 AM GMT ]
இந்த சம்பவம் காலி போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கணவனும் மனைவியும் ஆடம்பர கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் பொலிஸாரிடம் சிக்கியதை அடுத்து, மனைவியை காரில் தனித்து கைவிட்டு கணவன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து 5.15 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 700 ரூபா ரொக்கமும் கைப்பற்றியதாக போத்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfty.html
முல்லைத்தீவில் அரசியல் செல்வாக்குடன் காணி அபகரித்த சிங்களவர்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:21.51 AM GMT ]
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த சிங்களவர் ஏற்கனவே கருநாட்டுக் கேணியில் அரசியல் செல்வாக்குடன் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நபரே நேற்று கடற்கரைக்கு அருகில் உள்ள அரச காணியில் கனரக வாகனத்தின் உதவியுடன் காடுகளை அகற்றி வேலியமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு மக்கள் தெரியப்படுத்தியவுடன், காணி திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுசுட்டானில் மினிகூறாவளியினால் மக்கள் பெரிதும் பாதிப்பு. அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.
நேற்று (12.09.2014 அன்று) பிற்பகல் 4.00 மணியளவில் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மினிசூறாவளியினால் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் கிராமங்களை சேர்ந்த மக்களினதும், புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களினதும் 42 வீடுகள் முழுமையாகவோ அன்றி, சிறு பகுதியாகவோ சேதமடைந்துள்ளன.
பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி தூரத்தே வீசப்பட்டமையினாலும், மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் இவற்றில் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மக்கள் சேமித்து வைத்திருந்த நெல் மூடைகள், பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் அப்பியாசக்கொப்பிகள், அத்தியாவசிய வீட்டு ஆவணங்கள் பதிவு பத்திரங்கள், உடுபுடவைகள், உணவுப்பொருள்கள் மழையினால் நனைந்து சேதமடைந்துள்ளன. வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீட்டு கட்டுமாணத்துக்கு அரிந்த சீமெந்து கற்களும் மழை நீரில் கரைந்து போயுள்ளன. பயன்தரு நிலையிலிருந்த வாழை மரங்களும் முறிந்து போயுள்ளன.
இன்று காலை (13.09.2014) அப்பகுதிகளுக்கு சென்று அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டுள்ள கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பிரதேசசெயலர்களுடன் தொடர்பு கொண்டு,
இன்றும் மழை பெய்வதற்கான வானிலை அவதானிப்புகள் காணப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் அவலநிலை காணப்படுவதாகவும், ஆகையால் அவசர உதவிகளாக தறப்பாள்களையும், உலர் உணவுகளையும் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களும் தமது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக முடிந்தவரையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான இறுதிப்போரில் கணவரை இழந்த கெருடமடுவைச்சேர்ந்த சிறீரஞ்சன் புவனேஸ்ஸ கமலாம்பிகைவதி எனும் விதவைத்தாய் கூறுகையில்,
“ஏற்கனவே போரில் சேதமடைந்து இருந்த எங்கட வீடுகள திருத்தியமைக்கும் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய வீட்டுத்திட்டம் தான் எங்களுக்கு கிடைச்சது. நிறுவனம் கொஞ்ச காசு தரும். மிச்சத்துக்கு எங்கட காசப்போட்டுத்தான் நாங்க வீட்ட கட்டி முடிக்கோணும். காதுல கழுத்தில இருந்த நகைகளை எல்லாம் ஈடு வைச்சுத்தான் மரம் தடி சீட் வாங்கிப்போட்டிருந்தன். எல்லாத்தையும் காத்து கொண்டு போயிட்டுது. அடுத்து என்ன செய்யிறது எண்டே எனக்குத்தெரியேல்ல.” என்று தனது கையறுநிலையை வெளிப்படுத்தி கண்ணீர் மல்கினார்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் போரினால் குடும்பத்தலைவர்களை இழந்து பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களும் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும், ஏனைய நலன் விரும்பிகளும், நல்லுள்ளம் கொண்டோரும் தம்மால் முடிந்த வகையிலான உதவிகளை, குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUftz.html
Geen opmerkingen:
Een reactie posten