ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேட்டி எடுத்து அதிர்ச்சிகரமான ஆவணப்படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் தயாரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்மெட்யான் டெய்ரி (Meytaan Teire) என்ற பத்திரிகையாளர் பாலஸ்தீனத்தில் பிறந்து இளம் வயதிலேயே பல்வேறு நாடுகளுக்கு சென்று கடைசியில் இங்கிலாந்தில் இடம்பெயந்துள்ளார்.
கடந்த 2007 முதல் அல்ஜசீராவுடன் இணைந்து பணியாற்றும் மனித உரிமைகள், அகதிகள், போர்கள், ஆயுதங்கள் போன்றவை குறித்த நிறைய ஆவணப் படம் எடுத்துள்ளார்.
தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் சென்று அவர்களின் பேட்டிகள், கொள்கைகள் மற்றும் அவர்களின் தாக்குதல் உள்ளிட்ட காட்சிகளையும் நேரடியான காணொளியாய் எடுத்து இவர் வெளியிட்ட ஆவணப்படம் உலகையே அலற வைத்துள்ளார்.
இந்த காணொளியில், தீவிரவாத கமாண்டர் ஒருவர் பேசியதாவது, இஸ்லாமிய ஷியா அரசை நாங்கள் நிர்மானிப்போம். அதற்கு ஆயுதம்தான் ஒரே வழி என்று கையில் உள்ள துப்பாக்கியைத் தூக்கிக் காட்டியபடி முழக்கமிடுகிறார்.
இதனை தொடர்ந்து சிறுவன் ஒருவன் பேசியதாவது, நான் சிரியா, ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவேன். அவர்கள் நல்லது செய்கிறார்கள், கெட்டவர்களை அழிக்கிறார்கள்.
நானும் அவர்களுடன் இணைந்து அவர்களைக் கொன்று குவிப்பேன் என்று முழக்கமிடுகிறான்.
ஒரு இடத்தில் 50 சிரிய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி நட்டு வைத்திருப்பதையும் இந்த ஆவணப் படம் காட்டுகிறது. மேலும் சிறுவர், சிறுமிகளின் கையில் துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாய் இருக்கின்றது.
சிரியா-ஈராக் எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினரை வண்டியில் தூக்கி வீசியதுடன் உங்கள் தலைகளை வெட்டுவோம் என கூறியடியே செல்கின்றனர்.
இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அபு மூசா (Abu Moosa) என்பவர் சிரியாவில் உள்ள பகுதிகளில் இந்த கட்டுரையாளரை அழைத்துச் சென்று பல்வேறு செயல்பாடுகளையும் விளக்கிக் கூறியுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten