தாயகத்திலும், தமிழகத்திலும், புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம். எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்.
விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே!, குடும்பம் குடும்பமாக வந்து ஐநா பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 11 வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்
ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 11 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் Moudon எனும் நகரத்தில் இருந்து 59 Km தூரத்தை தாண்டி Rolle எனும் நகரத்தை வந்தடைந்தது.
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு செல்லும் வழிகளில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது ஆதரவையும், உதவிகளையும் கொடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஐநா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் ஈருருளிப் பயணம் நிறைவடைய இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே எனும் உறுதியோடு ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மிகுந்த வலிமையோடு சர்வதேச அரசியல் முச்சந்தி நோக்கி பயணிக்கின்றனர்.
அத்தோடு இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி உரிமையோடு வேண்டி நிற்கின்றனர்.
ஈருருளிப் பயணம் கடந்த நாட்களில் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து செல்லும் போது பல உள்ளூர் பத்திரிகைகளில் இவ் விடயம் சார்ந்து பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfv7.html
Geen opmerkingen:
Een reactie posten