தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

BJP கூட்டணியில் இருந்து வர மறுக்கும் ‪வைகோ‬ (படம் இணைப்பு)

தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ம.தி.மு.க. போராட்டம்!
தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகத்திலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஐ.நா.வின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் 9 ஆம் திகதி சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:- சிங்கள இராணுவத்தை ஏவி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இனக்கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவார். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் எண்ணிலடங்காத தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தபோதிலும், அந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஆணவத்தோடு அறிவித்து, ஐ.நா.மன்றத்தின் மதிப்புக்கே பங்கம் விளைவித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவை ஐ.நா.மன்றத்தின் பொதுச்சபையில் செப்ரெம்பர் 25 ஆம் திகதி உரையாற்ற அழைப்பு விடுத்திருப்பது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதால் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, ராஜபக்‌ஷவுக்கு விடுத்த அழைப்பை ஐ.நா. சபை திரும்பப் பெறவேண்டும். ஐ.நா.அறிவித்த விசாரணைக் குழுவினரை இந்தியாவுக்கு வர அனுமதித்து, தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் இலங்கை அரசின் இனக்கொலையால் தமிழகத்திற்கு தஞ்சமென வந்த ஈழத் தமிழ் அகதிகள் விசாரணைக் குழுவிடம் அச்சமின்றி வாக்குமூலம் வழங்க உத்தரவாதம் தருகிற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதனைச் செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமும், காவல்துறையும் முற்றாக வெளியேற்றப்பட்டு, ஈழத் தமிழர் தாயகத்தில் திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்றி, சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இந்த தீர்மானங்களை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் 9 ஆம் திகதி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
01 Sep 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409566671&archive=&start_from=&ucat=1&

செல்வச்சந்நிதியில் அதிர்ச்சி! குழந்தையைக் கொல்ல முயன்ற தாய்! (படம் இணைப்பு)
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தனது 4 வயதுப் பெண் குழந்தையை பெற்ற தாயே நிலத்தில் போட்டு கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனைக் கண்ட பொதுமக்கள் தாயிடம் இருந்து குழந்தையைப் பறித்துக் காப்பாற்றினர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் தாயும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இளவாலை பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த பெண் செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் அர்ச்சனைப் பொருட்களை விற்று வருகிறார். அவருடன் கூடவே 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு குழந்தைகளும் அங்கு இருந்துள்ளன.

நேற்றுக் காலை தனது தாயிடம் ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு சிறுமி கோரியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் திடீரென தனது 4 வயதுக் குழந்தையை நிலத்தில் போட்டு அதன் கழுத்தில் காலால் மிதித்துள்ளார். அங்கு நின்று நிலைமையை அவதானித்த பொதுமக்கள் உடனே குழந்தையைத் தாயிடம் இருந்து காப்பாற்ற முனைந்தனர். அவர்களை அருகே நெருங்கவிடாது கடுமையாகத் திட்டித் தீர்த்த அந்தத் தாய் பிள்ளையின் கழுத்தில் மேலும் அழுத்தமாக மிதித்துள்ளார். தாய் மித்ததில் மூச்சுத் திணறி குழந்தையின் கண்கள் பிதுங்கின. அதன் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியது.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பொதுமக்கள் உடனே தாயை கீழே தள்ளிவிட்டு குழந்தையை அவரிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றினர். பின்னர் அப்பகுதி கிராம அலுவலருக்கு விடயத்தை தெரியப்படுத்தி பிள்ளையையும் தாயையும் கிராமஅலுவலரிடம் ஒப்படைத்தனர். அவர் வல்வெட்டித்துறை பொலிஸாரை அழைத்து பிள்ளையை ஒப்படைத்ததார். தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கழுத்து நெரிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மேற்படி தாய் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது 5 வயது மகளையும் ஒன்றரை வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டு கொலை செய்ய முற்பட்ட போது அயலவர்களின் முயற்சியால் அவ்விரு சிறுவர்களும் காப்பாற்றப்பட்டிருந்தனர். தொடர்ந்து இளவாலை பொலிஸார் மேற்படி தாயை கைது செய்து யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் மேற்படி பெண்ணை நீதிமன்றக் காவலில் வைத்து மனநல சிகிச்சையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் அந்த தாயின் 5 வயது மகளை கைதடி சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஒன்றரை வயது மகனை பாட்டியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற காவலில் மனநல சிகிச்சை பெற்ற அத் தாய் நன்னடத்தை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதுடன் அவரது குழந்தைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையிலேயே அவர் தனது 5 வயது மகளை நேற்று கடுமையாகத் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
02 Sep 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409643533&archive=&start_from=&ucat=1&
BJP கூட்டணியில் இருந்து வர மறுக்கும் ‪வைகோ‬ (படம் இணைப்பு)
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பஜக கூட்டணியில் இணைந்த வைகோ தோல்வி அடைந்திருந்தாலும் கூட்டணியிலேயே தொடர விரும்புகிறார் என நமக்கு செய்தி சிக்கியுள்ளது , காரணம் ஈழத்தமிழர் பிரச்சினைதான்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு எனவும் அதற்கு இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வரவேண்டும் , தமிழீழம் அமைவதால் இந்தியாவுக்கு பாதுகாப்புதான் ஏற்படும் எனவும் , தமிழீழ மக்கள் என்றைக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்லை, இலங்கையில் வழும் சிங்களவர்கள் சீனவுக்கும், இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் , மற்றும் இஸ்லாமி நாடுகளுடனே நட்பினை பேணுகிறார்கள்.

ஆனல் அங்கு வாழும் தமிழர்கள் இந்திய மக்களுடன் குறிப்பாக தமிழ்நாடுடன் கலாச்சார ரீதியாகவும் ,வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எப்போதும் நல்ல எண்ண செயற்பாடுகளிலேயே ஈடுபட்டார்கள் என்ற பல்வேறு காரணங்களை முன் வைத்து பா ஜக வுடன் பேசிவருகிறார்,

இருந்தும் அவர் பாஜக கூட்டணியில் இருப்பது தமிழக அரசியலில் அவரின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது என்று ஆய்வாளர்களும் சில கட்சி தொண்டர்களும் கருதுகின்றனர் , அதைவிட பல ஈழ ஆதரவு கட்சி இயக்கங்களும் அவர் மீது விமர்சனங்களை அள்ளி வீசுகின்றனர்,

இருந்தும் அவர் தரப்பில் எமக்கு கிடைக்கும் செய்தி
தமிழ்நாடு இந்தியாவுக்கு உட்பட்டு இருப்பதனால் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை மாற்றத்தை ஏற்படுத்தி,இந்தியாவின் அனுசரணையுடனே தமிழீழ தனியரை அமைக்க முடியும் ,

தமிழ்நாடு அரசால் வலியுறுத்த மட்டுமே முடியும், செயல்படுத்துவது இந்தியாவின் கையில் தான் உள்ளது , அதற்கு உதாரணமாக தமிழக முதலமைச்சர் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்ன மாற்றத்தை தந்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

எது எப்படியோ தமிழக அரசியலில் வைகோ திகழ்வாரோ தெரியவில்லை , உலகத்தமிழ் உள்ளங்களில் என்றும் மாறாத புகழ் இருப்பை தக்கவைத்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை , வரும் சப்ரெம்பர் 15 தேதி அண்ண பிறந்த நாள் நிகழ்வில் வைகோவின் பல அரசியல் நிலைப்பாடு தெரிய வரலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
02 Sep 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409645846&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten