தேர்தல் வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றது: பொலிஸார் மௌனம்- கடிதம் எழுதும் அதிகாரியாக மாறியுள்ள தேர்தல் ஆணையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 05:46.23 AM GMT ]
பிரச்சார நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்கள், காரியாலய உடைப்பு என்று வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதும், அரசு, அரசாங்க ஊழியர்களை பிறமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து தேர்தல் பிரச்சாரங்களை செய்வதும், அரச வாகனங்கள், இலக்க தகடு இல்லாமல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தியும் வருகின்றது.
பயங்கர வன்முறைகள் நிறைந்து காணப்படும் இந்த தேர்தல் பிரச்சாரங்களில் மேலும் வன்முறைகள் அதிகரிக்கலாமெனவும், பொலிஸார் மௌனிகளாக நடக்கின்ற விடயங்களை பார்க்கும் நிலையுள்ளதாகவும் எதிர்கட்சிகளும், பெப்ரல் அமைப்பும் தெரிவிக்கின்றது.
இதேவேளை ஐ.தே.கட்சியின் தலைமை வேட்பாளர் ஹரின் பெர்ணண்டோ பொலிஸார் தேர்தல் சட்டங்களை மீறும் அரசின் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிடால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் கடிதங்களை எழுதும் அதிகாரியாக மாறியுள்ளார்- விஜித ஹேரத்
தேர்தல் ஆணையாளர் கடிதங்களை எழுதும் அதிகாரியாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடுப்பு எலும்பு உடைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் உத்தரவுகளை பொலிஸார் பொருட்படுத்துவதில்லை.
தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள 18ம் திருத்தச் சட்டமே இவ்வாறு தேர்தல் ஆணையாளரின் கைகளை கட்டிப் போட்டுள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையாளரினால் முடியவில்லை.
இதன் காரணமாகவே கேலிச் சித்திரக் கலைஞர்கள், மஹிந்த தேசப்பிரியவை திறமையற்ற டாசன் கதாபாத்திரமாக சித்திரிக்கின்றனர் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko5.html
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு! மக்கள் அச்சம்!
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 05:16.43 AM GMT ]
கடந்த புதன்கிழமை தம்பசிட்டியில் உள்ள ஆசிரியை ஒருவர் வீட்டில் அவரும் குடும்பத்தினரும் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை ஓடு பிரிக்கப்பட்டு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான லப்டொப், கமரா, பிரிண்டர் ஆகிய கணனிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
சுற்றுலா முடிந்து சில தினங்களில் வீடு திரும்பி வந்த போது இந்த திருட்டு இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நுழைந்த இனந்தெரியாத திருடர்கள் வீட்டில் உள்ளோரைத் தாக்கி விட்டு 8 பவுண் நகை 30 ஆயிரம் ருபா ரொக்கப் பணம் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதே தினத்தன்று வியாபாரி மூலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி ஆகிய இருவரும் அல்வாய் - மாலிச்சந்தி பிள்ளையார் கோவிலடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த திருடன் ஒருவன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளான்.
இது தொடர்பாக அண்ணன், தம்பி இருவரும் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்து வேறொரு மோட்டார் சைக்களில் திருடனை துரத்திச் சென்றுள்ளனர்.
மக்களும் பொலிஸாரும் இணைந்து கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளிவெளியில் மோட்டார் சைக்கிளுடன் திருடனை மடக்கிப் பிடித்தனர்.
இத்திருட்டை மேற்கொண்டவர் புதுக்குடியிருப்பு வாசி என்றும், பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர் எனவும் நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பருத்தித்துறை - ஓராங்கட்டை சந்தியில் உள்ள இளைப்பாறிய அதிபர் ஒருவரின் வீட்டுக்கு பட்டப்பகல் வேளை நுழைந்த திருடர்கள் கள்ளச் சாவியினால் வீட்டைத் திறந்து சோதனையிட்டு அலுமாரியில் இருந்த பொருட்களை சிதறடித்து அதற்குள் இருந்த 85 ஆயிரம் ரூபா ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
திருமண வைபவம் ஒன்றுக்குச் சென்றிருந்த குறிப்பிட்ட வீட்டுக்காரர்கள் திரும்பி வந்து பார்த்த போது இச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த வாரம் திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வேலையை முடித்துக் கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்து 50 ரூபா ரீலோட் தருமாறு பயமுறுத்திக் கேட்கவே இளைஞன் கை தொலைபேசியை வெளியில் எடுத்த போது அந்த இரு இளைஞர்களும் கைத்தொலைபேசியை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளன. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko4.html
சுப்பிரமணிய சுவாமியை கைது செய்ய வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை - சுவாமிக்கு “இசட்” ரக பாதுகாப்பு!– மத்திய அரசு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 05:08.59 AM GMT ]
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாகவும், அப்போது, எல்லை தாண்டிய காரணத்திற்காக கைது செய்யும் மீனவர்களை விடுவித்து விடுமாறும், விசைப்படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்று கூறி படகுகளை சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறியதாகக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்தால் கொதித்தெழுந்துள்ள மீனவப் பிரதிநிதிகள் சுப்பிரமணிய சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து மீனவ நேசக்கரங்களின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கருத்து தெரிவித்த போது,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கைது நடவடிக்கை, விசைப் படகுகள் பறிமுதல் ஆகியவற்றைக் கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பிரச்சினை எழும்போதெல்லாம் தமிழக முதல்வரும் கடிதங்கள் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், விசைப்படகுகள் விடுவிக்கப்படாததன் பின்னணியில், தான் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் தங்களது நிலைப்பாடா என்பதை பாஜக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய குற்றத்துக்காகவும் சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
இதே கோரிக்கையை பல்வேறு மீனவப் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருவதால் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு “இசட்” ரக பாதுகாப்பு!– மத்திய அரசு
இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும், ஜனதா தள் கட்சியை கலைத்து ப.ஜ. கா வில் இணைத்துக் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு மத்திய அரசு அதிஉயர் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்த "இசட்" ரக பாதுகாப்பு சோனியா காந்தி, ராகுல் காந்தி, போன்றவர்களுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பாகும், ஆகையால் இவர் தமிழ் நாட்டுக்கோ அல்லது இந்தியாவின் எப்பகுதிக்கு சென்றாலும் இவரை அம் மாநில அரசின் சட்ட திட்டங்கள் மூலம் எதுவித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது.
இலங்கை அரசுக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பறிக்க ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்ட இக் கோமாளிக்கு இந்தியா மத்திய அரசு கொடுத்திருக்கும் இந்த பாதுகாப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்பு
தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தானே ஆலோசனை கூறினேன் என்று பேட்டி கொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து தமிழகத்தில் 2வது நாளாக இன்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் உளுந்துர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko3.html
Geen opmerkingen:
Een reactie posten