தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானம்

கடையை உடைத்து திருட்டு: வவுனியாவில் சம்பவம்- கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 06:19.35 AM GMT ]
வவுனியா நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் இயங்கிய இரு கடைகளை உடைத்து திருடியவர்களை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நவீன சந்தைத் தொகுதியில் உள்ள அழகுப்பொருள், புடவை கடைகள் உடைத்து உட்புகுந்த திருடர்கள் அவ்விரு கடைகளிலும் இருந்த 6000 ரூபா மற்றும் 10,000 ரூபா பணத்தை திருடியுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்து, ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடி கண்டி பஸ்ஸில் ஏறி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததும் பஸ்ஸை வழிமறித்த வவுனியா பொலிஸார் குறித்த இரு நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஹற்றன் மற்றும் எட்டியாந்தோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியாப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
கெஸ்பாவ நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையொன்றுடன் தொடர்புடைய 29 வயதான இளைஞரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். தப்பிச்செல்ல முயற்சித்த சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
காயமடைந்த சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs4.html
ஊடக முதலாளிகள் ஐ.தே.கட்சியின் வெற்றியை தடுக்க முயற்சி (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 06:53.17 AM GMT ]
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிக்காட்டலில் சகல அரச விரோத சக்திகளையும் ஒரே மேடைக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சி, வர்ணம், சின்னம் என்று தனியாக பிரிந்து செயற்பட்டால், இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது. அத்துடன் இப்படியான சந்தர்ப்பத்தில் நண்பர்கள் போல் இருக்கும் எதிரான சக்திகளையும் அடையாளம் காணவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் நேர்மையான நோக்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான பயணத்தை ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளால் அச்சமடைந்த சில ஊடக நிறுவனங்கள் அதனை குழப்ப முயற்சித்து வருகின்றன.
20 வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்த துன்பங்களை அனுபவித்த ஐக்கிய தேசியக் கட்சியினர் வெற்றி பெற முயற்சிக்கும் போது ராஜாக்கள், மகா ராஜாக்கள் போன்ற ஊடக முதலாளிமார் அதனை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இதற்கான காவி அணிந்தவர்கள், காவி அணியாதவர்களையும் இணைந்து கொண்டு, இந்த ஊடக முதலாளிமார் அரசாங்கத்தை மகிழ்வித்து வருகின்றனர்.
எந்த ஊடகங்களும் இல்லாத காலத்தில் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன 6 இல் 5 பெரும்பான்மையை பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக மாற்று வழிகள் பின்பற்ற வேண்டும்.
ஊடக முதலாளிமார் எவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டாலும் அவற்றை நான் பொருட்படுத்த போவதில்லை எனவும் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் - ஹரின்
ஊவா மகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் புதிய பாடல் ஒன்றை பாடி வருகின்றார். உறுப்பினர் எண்ணிக்கையை கொள்ளையிட்ட ஆணையாளர் இப்போது தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றார்.
தேர்தல் ஆணையாளருக்கு தாடி இருந்தாலும் பரவாயில்லை. ஏதேனும் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன்.
பதுளையில் இந்தப் போராட்டத்தை நான் முன்னெடுப்பேன். இவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்க முடியாது. மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். ஊவா முடிவுகளை முழு நாடுமே எதிர்பார்த்திருக்கின்றது.
அதற்காக முழு நாடுமே குரல் கொடுக்க தயாராக உள்ளது என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் வேட்பாளரது வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு பிபிலை நகரின் சுற்றுவட்டத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது. பிபிலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 40 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊவா தேர்தல் பிரசாரத்திற்கு சஜித் வந்ததால் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடாது - ஹரின் பெர்ணான்டோ
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்பு இல்லாவிட்டாலும் அது பெரும் குறைப்பாடாக இருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின்  ஊவா மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இல்லாது தேர்தலை முன்னெடுப்பது சிரமமான என்று கூறுவது தவறானது , எனினும் அவரது வருகை பாராட்டத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் நெருக்கடியை தீர்க்க அவரது வருகை உதவும்.
அத்துடன் கட்சியினருக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதனை முடிவுக்கு கொண்டு வரவும் அவரது வருகை உதவியாக அமையும் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் நியாயம் கேட்டு நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 08:12.33 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நியாயம் கேட்டு நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி போராட்டம் ஒன்றை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் மரமொன்றின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றார்.
மாதம்பைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றார்.
போட்டியொன்றில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் உரிய இடம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த நபர் போராட்டம் நடத்தி வருகின்றார்.
குருணாகலில் நடைபெற்ற சிறு கைத்தொழில் கண்காட்சிப் போட்டியொன்றில் இவ்வாறு தமக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீ.டீ. ஹப்புவாராச்சி என்ற 45 வயதான நபரே இவ்வாறு ஜனாதிபதியிடம் நியாம் கோரி மரத்தில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றார்.
2010ம் ஆண்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgtz.html
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானம்
[ வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2014, 08:55.03 AM GMT ]
குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த சின தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை கடத்திச்சென்றமை தொடர்பில் உரிய தகவல்களை தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்
இது தொடர்பான தகவல்களை தருவோர் 0777223095 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இவரை கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgt1.html

Geen opmerkingen:

Een reactie posten