தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

முஸ்லிம் காங்கிரஸ் விலகப் போகிறோம் என்று நாடகமாடுகின்றது: பைசர் முஸ்தபா பா.உ.


ஆபிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:44.09 AM GMT ]
இலங்கை, தமது வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடிய அனுகூலங்களை ஆபிரிக்க நாடுகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினால் இலங்கைக்கு பல அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் உகண்டா சென்றுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அங்கு இம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேற்கத்தேய நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தங்களையே பிரயோகித்து வருகிறன. இந்த நாடுகளுடன் உறவினை பேணுவதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிட்டுவதில்லை.
எனினும் ஆபிரிக்க நாடுகள் இலங்கையின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாகவும், இந்த நாடுகளுடன் உறவினை நீடிப்பதன் ஊடாக இலங்கையும் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் விலகப் போகிறோம் என்று நாடகமாடுகின்றது: பைசர் முஸ்தபா பா.உ.
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:56.48 AM GMT ]
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு நாடகமாடுகின்றனர் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அவர்கள் இப்படியே கூறிக் கொண்டிருப்பதனை விட்டு விட்டு விலகுவதாயின் விலகிச் சென்று விட வேண்டும். தெருநாய் தனது வாலை ஆட்டும் திசையில் போவதில்லை. அதுபோன்றே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என கூறிக் கொண்டு நாடகமாடுகின்றனர்.
அரசாங்கத்துடன் உள்ள சில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் அரசாங்கத்தை விட்டு விலகப் போகிறோம் என ஆனால், அரசின் அனைத்து வரப்பிரசாதங்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு ஒட்டிக் கொண்டே உள்ளனர்.
இவ்வாறானவர்கள், தங்களது கட்சியின் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அரசுடன் இருக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten