[ திங்கட்கிழமை, 27 மே 2013, 07:18.35 AM GMT ]
குறித்த தாய் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளார்.
சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான பூஜா ( வயது 7) மற்றும் மூன்றரை வயதான மீனுஜா ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
அவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2ம் இணைப்பு
குடும்ப தகராறு காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த தாய் காப்பாற்றப்பட்டு, இரு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மீரொவோடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை சுங்காங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னத்தம்பி வாணிஸ்ரீ என்பவரே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் தற்கொலை செய்வதுடன், தனது இரு குழந்தைகளையும் சேர்த்து கொலை செய்வதற்கு திட்டமிட்டு நேற்று காலை 10.30 மணியளவில் மீராவோடை முருகன் ஆலயத்திற்கு பின்னால் உள்ள ஆற்றில் குதித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அவதானித்த அயலவர்கள் இவர்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் ஈடுபட்ட போதிலும் 7 வயதான தவசீலன் டிலக்சினி மற்றும் 4 வயதான தவசீலன் மீனுஜா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தாய் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மரணமடைந்த இரு குழந்தைகளினதும் சடலங்கள் மீராவோடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறைச்சிக் கடைகளை மூடுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 04:38.58 PM GMT ]
இலங்கையிலுள்ள இறைச்சிக் கடைகளை மூடுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாடுகளை கொல்லக் கூடாது எனக் கோரி தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிக் கிரியைகள் நடத்தப்படும் வரையிலேனும் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிஹல ராவய என்ற அமைப்பே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. சில பகுதிகளில் இந்தக் கோரிக்கையை இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிக் கிரியைகள் ரத்தினபுரியில் நடைபெறவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten