[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 08:46.32 AM GMT ]
தாய்லாந்து பிரதமர் யன்க்லுக் சின்வத்ரா அவர்கள் சிறிலங்காவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணமொன்றினை மேற்கொண்டு வரும் நிலையில், சிறிலங்கா அரச படைகளினால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போரினால் கணவன்மார்களை இழந்த தமிழ்பெண்கள் மற்றும் அவர்களது பெண் பிள்ளைகளின் நிலை குறித்து கவனம் செலுத்துமாறு, நாடுகடந்த தமிழீழ அராசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு மே31ம் நாள் வெள்ளிக்கிழமை சென்றடையவுள்ள தாய்லாந்து பிரதமர் யன்க்லுக் சின்வத்ரா அவர்கள், சிறிலங்காவின் அரச உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்த இருப்பதோடு, சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் உரையொன்றினையும் ஆற்றவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அராசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இந்த அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்பெண்கள் மீதான சிறிலங்கா அரச படைகளினால் பாலியல் வன்புணர்வுகள், போரினால் கணவன்மார்களை இழந்த 90 ஆயிரம் தமிழ்பெண்கள் மற்றும் அவர்களது பெண் பிள்ளைகள் , சிறிலங்கா அரச படைகளினால் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கோரிக்கையில், ஓரு நாட்டின் தலைவராக மட்டுமல்ல ஓரு தாயாகவும் தாங்கள் உள்ள நிலையில் , தமிழ்பெண்கள் எதிர்கொண்டுள்ள இவ்விவகாரம் குறித்து சிறிலங்காவின் பாராளுமன்றத்திலான தங்களது உரையில் கவனம்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி கொமன்வெல்த் அலுவலகத்தின் மே 2012 அறிக்கையில் படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90,000 தமிழ் போர் விதவைகள் அங்கு உள்ளனர் என்பதனையும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசுத் தலைவர் மற்றும் அவரது அரச படைகளது போர்குற்றங்கள் மற்றும் இனஅழிப்புக்குறித்து தட்டிக்கேட்டக வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையின் அங்கத்துவ நாடாக தாய்லாந்து உள்ளதென்பதனையும் அக்கோரிக்கையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ள அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதி ஐந்து மாதங்களின் போது 70 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அக்கோரிக்கையில், இறுதிக் கட்ட போரின் போது உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியனவற்றின் விநியோகங்களை தடை செய்த சிறிலங்கா அரசாங்கம் அதன்வழியே பெருமளவிலான பொதுமக்களை கொன்றொழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம்: ஊடக அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 10:02.35 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஊடக ஒழுக்கக் கோவை பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சில ஊடகங்களின் செயற்பாடுகள் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டுளளார்.
எனவே இவ்வாறான ஒழுக்கக் கோவையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறான ஒழுக்கக் கோவையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படக் கூடிய வகையில் ஊடகங்கள் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten