[ புதன்கிழமை, 29 மே 2013, 01:57.14 AM GMT ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றது.
பௌத்த தர்மத்திற்கு அமைவான முறையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்குள் நிலவி வரும் முரண்பாடே இந்த குழப்ப நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முதலமைச்சருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள கல்முனை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நூலகத் அங்குரார்ப்பண வைபவம் ஒன்று தொடர்பில் இந்த முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த நூலகத்தின் அங்குரார்ப்பண வைபவத்தினை முதலமைச்சர் மஜீட் தடுத்து நிறுத்தியதாக முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட மறுநாளே நீதிஅமைச்சரும், கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் குறித்த நூலகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்புடனே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டால் ஆட்சியே கவிழக் கூடிய அபாயம் நிலவுகின்றது என சுட்டிக்காட்டப்படுகிறது.
பௌத்த தர்மத்திற்கு அமைவாக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!- பொதுபல சேனா
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:58.06 AM GMT ]
மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை இழிவுபடுத்துகின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மிருக வதைக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten