[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:35.29 AM GMT ]
காலி மேலதிக நீதிமன்ற நீதிவான் குணேந்திர முணசிங்க முன்னிலையில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெத் செவன மத்திய நிலையம் நடத்திச் செல்லப்பட்ட காணிக்கும், கட்டிடத்திற்கும் உரிமை கோரும் ஒருவர் இதற்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை தாக்கல் செய்த டி.ஜி.அசங்க அமரசிறி என்பவர், தமது காணியை பொதுபல சேனா அமைப்பினர் பலவந்தமாக அபகரித்து பயன்பெற்று வருவதாக முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மெத் செவனயில் பணிபுரிந்து வந்த 4 பேர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
யாழ்.கல்வியியல் கல்லூரியில் தமிழ் மொழி பாடத்தை பூர்த்தி செய்த பிக்குகள்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 03:01.35 AM GMT ]
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ் மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது.
கல்வியமைச்சின் மொழிக் கல்வி பிரிவின் ஆலோசகர் உயன்கல்ல ஞானரத்ன தேரரின் பங்களிப்புடன் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயிற்சி நெறி காலத்தில் குறித்த பௌத்த பிக்குகள் குடாநாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
பிறமொழிகளை கற்பதன் ஊடாக ஏற்படும் சமூக நல்லிணக்கம் மற்றும் திறனபிவிருத்தி என்பன நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தும் என்று உயன்கல்ல ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மத குருமார் பயிற்சிநெறியை நிறைவு செய்து விடுகை பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten