தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது!- கோத்தபாய


இலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பல சந்தேகநபர்கள் கைது! நாணயத்தாள்கள், இயந்திரங்களும் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 12:00.10 AM GMT ]
இலங்கையில் கடந்த சில தினங்களாக எட்டியாந்தோட்டை, செவனகல, கொஸ்கொட உட்பட நாட்டின் சில பிரதேசஙகளில் போலி ரூபா நோட்டுக்கள் வைத்திருந்த பல சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட 500 ரூபா, 1000 ரூபா மற்றும் 2000 ரூபா உள்ள நோட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் உள்ள நோட்டுக்கள் அச்சிடும் இடங்கள் பலவற்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், அங்கிருந்து பல்வேறு இயந்திரங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, போலியாக அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் தொடர்பில் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கள்ள நோடுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், புழக்கத்துக்கு விடுதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கோ, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையிலேயே கள்ள நோட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் பொலிஸ் தலைமையகம் அந்த கள்ள நோட்டுக்களை அடையாளம் காண்பதற்கான சில முக்கிய குறிப்புக்களை வெளியிட்டுள்ளது.
* ரூபா நோட்டில் காணப்படும் நீர் அடையாளம் (Water Mark) உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
* நோட்டின் குறுக்காக காணப்படும் பாதுகாப்பு நூல் அடையாளம் உரிய முறையில் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும்.
* கள்ள நோட்டு உண்மையான நோட்டை விட தடிப்பானதாக காணப்படும். சில நோட்டுக்களில் இரண்டு தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
* கள்ள நோட்டின் நிறங்கள் உண்மையான நோட்டை விட மாறுபட்டதாக காணப்படும் இதனை உரிய முறையில் அவதானிக்க முடியும்.
* ரூபா நோட்டுக்கள் பலவற்றை கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு நடுவில் போலி நோட்டுக்களும் இருக்கலாம்.
போலி நோட்டுக்களை உங்களிடம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும் என்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது!- கோத்தபாய
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 12:16.39 AM GMT ]
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல  எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக  நாட்டுக்கு  நன்மை செய்யாமலிருக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்தியாவின் தேவைகளுக்காக எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten