தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

புலிகள் இருந்­தி­ருந்தால் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்­பந்தன்


மட்டக்களப்பில் புத்தர் சிலை: தடுத்து நிறுத்துமாறு த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 04:10.42 AM GMT ]
மட்டக்களப்பு மாநகரசபை நுழைவாயிலின் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கையொப்பம் இட்டு இந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் நுழைவாயில் புத்தர் சிலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவது தொடர்பில் எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரரின் வேண்டுகோளுக்கிணங்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், வீதி அபிவருத்தி அதிகாரசபைக்கென ஒதுக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியை ஒதுக்குமாறும் சிலை நிறுவ உதவுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு நுழைவாயிலில் இவ்வாறு நிலை நிறுவ எடுக்கும் முயற்சியானது மட்டக்களப்பில் சமாதானத்தை குழப்பி, இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த நுழைவாயிலுக்கு வடக்காக 200 மீற்றர் தொலைவில் பிள்ளையார் ஆலயமும் மேற்கெ 500 மீற்றர் தொலைவில் கத்தோலிக்க மன்றேசாவும் உள்ள போதிலும் அவர்கள் துணிந்து அங்கு தமது மத சிலைகளை நிறுவாமல் இருக்கும் நிலையில் புத்தர் சிலையை அங்கு நிறுவும் செயலானது சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் அது பாதிப்படைய செய்யும்.
எனவே இந்த புத்தர் சிலை அமைப்பதற்காக நெஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை வாபஸ்பெற்று சிலை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உதவுமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இருந்­தி­ருந்தால் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்­பந்தன்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 04:05.39 AM GMT ]
 விடு­தலைப் புலி­களை பல நாடு­கள் ஒன்று சேர்ந்தே அழித்­தி­ருந்­தன. புலிகள் இன்று இருந்­தி­ருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரும் பல்­வேறு கெடு­பி­டிகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். 
ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்­வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை.
எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.
அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
எமது கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் சிங்­கள மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.
சிங்­கள மக்கள் எம்மை நேசிக்­கின்­றனர். எங்­க­ளுக்கு தீர்வைத் தர தயா­ராக உள்­ளனர்.
ஆனால் அர­சியல் தலை­வர்கள் தமது சுய­ந­ல­னுக்­கா­கவும் தமது பத­வி­க­ளுக்­கா­கவும் எமது உரி­மை­களை தர மறுக்­கின்­றனர்.
விடு­தலைப் புலி­களை பல நாடு­கள் ஒன்று சேர்ந்தே அழித்­தி­ருந்­தன.
புலிகள் இன்று இருந்­தி­ருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரும் பல்­வேறு கெடு­பி­டிகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

Geen opmerkingen:

Een reactie posten