[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 06:37.16 AM GMT ]
தங்களது கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய பூரண அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.
அமைச்சுக்களில் கடயைமாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரைகளை செய்யவும் இந்த சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தக் கூடிய வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கென பாராளுமன்றில் விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்ட மூலத்திற்கான அனுமதி அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி அமைச்சர் மேர்வின் சில்வா களனிப் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தமையும் நாடு முழுவதும் மேர்வின் சில்வாவின் செயலுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வேலமாலிகிதன் மற்றும் பொன்காந்தனுடைய அடிப்படை மனித உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 11:54.02 AM GMT ]
இந்தக் கைதுகளும் தடுப்புக்காவலும் சட்டரீதியற்றதெனவும் அவர்களை விடுதலை செய்யும்படியும், சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா பயங்கவாதத் தடைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பூசா தடுப்பு முகாமின் பொறுப்பதிகாரி, பயங்கவாதத் தடைப் பிரிவின் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன், பாதுகாப்புப் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச, சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு உயர் நீதிமன்றில் இரண்டு அடிப்படை மனித உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மார்சுக், பி ஜிடெப், கே. சிறிபவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமது வாதத்தில்,
தை மாதம் 12ம் திகதி 2 மணி 30 நிமிடமளவில் மூன்று வாகனங்களில் வந்த 20 பயங்கரவாத தடைப் பிரிவுப் பொலிசார் ஆயுதங்கள் கையிலும் தோளிலும் பைகளுடன அறிவகம் என அழைக்கப்படும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்திற்கு உள்ளே நுழைந்து அங்கு கடமையிலிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் செயளாலரான லட்சுமிகாந்தன் தட்டெழுத்தாளர் ஆகியோரிடம் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறிதரனின் அலுவலகமா என கூறியபடி காரியாலயத்திற்குள் உட்புகுந்த வேளையில் வசந்தம், டான், சிகரம் தொலைக்காட்சியை சேர்ந்த மூவரும் தினமுரசு பத்திரிகையை சார்ந்த றுசாங்கன் என்பவரும் காரியாலத்திற்குள் கமரா, தொலைத்தொடர்பு சாதனங்களுடன் உட்புகுந்துள்ளனர்.
காரியாலயத்தில் அமைந்துள்ள அறைகளை சோதனையிட்டதாகவும் தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கையளவு வெடிமருந்துகள் ஆபாச சிடிக்களை மேலும் ஆணுறைகளை லட்சுமி காந்தனிடம் காட்டியதுடன் பலாத்காரமாக ஆணுறை உட்பட தாங்கள் கண்டுபிடித்ததாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் லட்சுமிகாந்தனின் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளதுடன் லட்சுமிகாந்தனை வைத்து பொலிசாரால எடுக்கப்பட்ட படங்கள் துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டு கிளிநொச்சி நகரத்தில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு தைமாதம் கொழும்பு வந்த லட்சுமிகாந்தன் தை மாதம் 12ம் திகதி கிளிநொச்சி காரியாலயத்தில் நடந்த விடயங்களையும் பொலிசார் நடந்து கொண்ட முறை பற்றியும் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று நாட்களில் லட்சுமிகாந்தனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாரின் இந்த நடவடிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தமையால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொலிசார் திட்டமிட்டு செயல்பட்டுள்ளமை தெளிவாகின்றது என வாதத்தில் குறிப்பிட்டார்.
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை செவிமடுத்த நீதியரசர் குழாம் அடிப்படை மனிதஉரிமை மனுக்களை விசாiணைக்கு ஏற்றுக் கொண்டதுடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பும்படி பதிவாளருககு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten