தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்


காத்தான்குடி நகரசபையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறுகோரி கவன ஈர்ப்பு போராட்டம்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:04.40 PM GMT ]
மட்டக்களப்பு- காத்தான்குடி நகரசபையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று காலை காத்தான்குடி நகரசபைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் இவ்வியக்கத்தின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், அதன் சூறா சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
'நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை பேணவேண்டும்', 'நகர சபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியல் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்', 'நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொள்வதை நிறுத்தவேண்டும்', 'அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்த வேண்டும்', 'பள்ளிவாயல்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்', 'நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும்', 'நகரசபையின் செயலாளர் சட்டத்தின் வழியில் நகரசபையை வழிநடாத்த வேண்டும்' போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பிலான காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் எம்.நசீர், நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழிமி, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம்.ஹாறூன், நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் செலயாளர் எம்.முஹ்சின் உட்பட அதன் சூறா சபை உறப்பினர்கள் அதன் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவர் காத்தான்குடி நகர சபையில் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
காத்தான்குடி நகர சபையின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன்தான் நடைபெறுவதாகவும் எந்த ஒரு ஊழல் மோசடியும் இடம்பெறவில்லையெனவும் முடிந்தால் நிரூபித்துக்காட்டட்டும் எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 02:17.05 PM GMT ]
கச்சதீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய தமிழ் நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இராமேஸ்வரத்தைத் தவிர்த்த மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஆனால் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவம் கச்சதீவு அருகே 4 போர்க் கப்பகளை நிறுத்தியுள்ளது. மேலும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கச்சதீவு பகுதியைச் சுற்றி மிதவை பலூன்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவர் என்பதால் அதிகம் கண்காணிப்பார்கள், அவர்களை இலங்கை இராணுவத்தினர் அடித்து விரட்டுவார்கள். ஆனால், நாட்டுப் படகு மீன்வர்களை பெரிதும் தடை செய்வதில்லை. ஆனால், இந்த முறை நாட்டுப் படகு மீனவர்களையும் இனிமேல் இங்கே மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள் என்றனர்.
இந்தத் தகவல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் இந்த நேரத்தில், கச்சதீவு பகுதியில் இலங்கை இராணுவம் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள செயல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக மீனவர்கள் கூறியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten