தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

காத்தான்குடி கடலில் குதித்த பெண் உயிருடன் மீட்பு


மகாசென் புயல்!- பகிரங்க மன்னிப்புக் கோரியது வளிமண்டலவியல் திணைக்களம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 07:09.08 AM GMT ]
இந்து சமுத்திரப் பகுதியில் இம்மாத ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளிக்கு இலங்கையின் சிறப்புமிக்க அரசர்களில் ஒருவரான மகாசேனன் என்பவரது பெயரை வைத்தமைக்காக வளிமண்டளவியல் திணைக்களம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.
அழிவை ஏற்படுத்தும் சூறாவளிக்கு மகாசென் என பெயர் இட்டதை பொதுமக்களும் பொதுநிறுவனங்களும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக வளிமண்டளவியல் திணைக்களம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.
இந்நிலையிலே வளிமண்டளவியல் திணைக்களம் மன்னனது பெயரை சூறாவளிக்கு வைத்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
காத்தான்குடி கடலில் குதித்த பெண் உயிருடன் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 07:57.13 AM GMT ]
மட்டக்களப்புக் காத்தான்குடி கடலில் இன்று காலை 45 வயதுடைய பெண்ணொருவர் குதித்து, உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறுித்த பெண் கடலில் குதிப்பதை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உடனடியாக அவரை உயிருடன் மீட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடலில் குதித்தமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten