இங்கிலாந்து நாட்டின் பாலியல் குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தும் Nick Ross என்பவர் கூறிய ஒரு கருத்து அந்நாட்டு பெண்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரம் எல்லாமே கற்பழிப்பு குற்றத்தில் வராது. ஒரு பெண் போதையில் இருக்கும்போது அவருடைய ஆண் நண்பருடன் பாலியல் உறவு ஏற்பட்டால், அது பாலியல் பலாத்காரம் கிடையாது.
ஆண் நண்பர்களுடன் சகஜமாக பார்ட்டிகளில் போதை மருந்தை உட்கொள்ளும் பெண், தன்னிடம் பாலியல் உறவு கொள்ள வருபவர்களிடம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. எனவே இது பாலியல் பலாத்கார வகையில் சேராது என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து லண்டன் பெண்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nick Ross அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்போவதாகவும், அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் உறவு கொண்டாலே அது பாலியல் பலாத்காரம்தான். Nick Ross கருத்து பெண்களை இழிவு படுத்துகிறது என்று பெண்கள் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten