தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

இலண்டனில் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக வாழ்வதாக குற்றச்சாட்டு


தாயை கொலை செய்து, மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும் போது மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 06:17.29 AM GMT ]
கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார்.
தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரே தப்பிச் செல்லும் போது மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிட்டிகல மத்தக்க பிரதேசத்தில் 73 வயதான இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்து அவருடன் வசித்து வந்த பெண்ணையே குறித்த சந்தேகநபர் கடத்திச் சென்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் அப்பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று முந்தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலை செய்வதற்காக தான் பயன்படுத்திய ஆயுதத்தை மத்தக காட்டுப் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக கூறி பொலிஸரை அழைத்துச் சென்ற சந்தேகநபர், தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியபோது காட்டில் விழுந்து கல் ஒன்றில் அவரது தலை அடியுண்ட நிலையில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தாயின் சடலம் அழுகிய நிலையில் கடந்த 16ஆம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேகநபரின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக வாழ்வதாக குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:33.29 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய இலங்கை அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார்.
சிறுவர் போராளிகளை யுத்தத்தில் ஈடுபடுத்திய அடெல், தென் இலண்டனில் அமைதியாக வாழ்ந்து வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் க்ளாகிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten