[ புதன்கிழமை, 29 மே 2013, 01:28.44 PM GMT ] [ விகடன் ]
இராமாயணத்தில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி மன்னனாகிய இராமன் ஊரார் சொல் கேட்டு கர்ப்பிணியான சீதையை கானகத்துக்குள் கொண்டு சென்று விடுகிறான். அவளுக்கு அங்கு ஒரு முனிவர் தன் ஆச்சிரமத்தில் அடைக்கலம் கொடுக்கிறார். அங்கு அவள் இராமனின் புதல்வர்களான லவனையும் குசனையும் ஈன்றெடுத்து வளர்த்து வருகிறாள். இந்த நிலையில் இராமர் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்துகின்றான்.
மட்டக்களப்பு வரவேற்பு பகுதியில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களை கமராவில் பதிவு செய்த புலனாய்வுத் துறையினரை புகைப்படம் எடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் எச்சரிக்கை செய்துள்ளார்.
அஸ்வமேத யாகத்தின் போது மன்னனின் கொடியுடன் யாகக் குதிரை சுதந்திரமாக நடமாடவிடப்படும். அதன் பின்னே படை வீரர்கள் செல்வார்கள். எங்கெல்லாம் அந்தக் குதிரை போகிறதோ அந்த இடங்கள் யாவும் யாகம் செய்யும் மன்னனின் ஆட்சிக்கு அடிபணிந்து விட்டன என்று அர்த்தம்.
அதனால் அந்தக் குதிரையோடும் வீரர்களோடும் யாகத்துக்கான அவிசுகளையும் பொருள்களையும் பொன்னையும் அந்தச் சிற்றரசர்கள் கொடுத்து அனுப்புவது வழக்கம். அவ்வாறில்லாம் அந்தக் குதிரையை எந்த மன்னனாவது தடுத்து நிறுத்தினால் அவன் யாகம் செய்யும் மன்னனுடன் போரிட விரும்புகிறான் என்று அர்த்தப்படும்.
இராமனின் யாகக் குதிரை கானகம் வழியாகச் சென்றபோது அதனைச் சிறுவர்களான லவனும் குசனும் பிடித்துக் கட்டிவிடுகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த பரதன், இலக்குவணன் முதலான இராமனின் சகோதரர்கள் உள்ளிட்ட படைவீரர்கள் சிறுவர்களோடு போரிடப் போகிறார்கள்.
ஆனால் வில்வித்தையில் தேர்ந்தவர்களான இராமனின் புதல்வர்கள் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்கிறார்கள். கடைசியில் இராமனே களத்துக்கு வருகிறான். அவனும் தோற்கும் தறுவாயில் சீதை வெளிப்பட்டு தன் புதல்வர்களிடம் இருந்து குதிரையை விடுக்கிறாள்.
இதேபோன்று மகாபாரதத்திலும் அஸ்வமேத யாகம் பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. இந்து மதத்தின் அதிஉச்ச நிலை யாகமாக அஸ்வதேம யாகமே கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டாலும் இலங்கையில் அது நடைபெறுவது மிகக் குறைவே.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரங்களால் இலங்கை எரிந்து அடங்கிய காலகட்டத்தில் அமைச்சராக இருந்த இராசதுரையால் பிரேமதாஸாவின் நிதி உதவியுடன் பம்பலப்பிட்டியில் முதன்முறையாக இலங்கையில் அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டிருந்தது. இப்போது மூன்று ஆண்டுகள் கழிந்து இலங்கையில் 2வது அஸ்வமேத யாகம் காரைநகர் மணல்பிட்டி புகலி சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ளது'' என்று சிவஸ்ரீ சோமசுந்தரக்குருக்கள் கூறுகிறார். இவரே அஸ்வமேத யாகம் நடைபெறவுள்ள ஆலயத்தின் பிரதம குரு.
இந்த யாகம் 3 கோடி ரூபா செலவில் நடத்தப்படுகிறது. இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்துக்குருமார் ஒன்றிணைந்து இந்த யாகத்தை நடத்துகின்றனர்.
அஸ்வமேத யாகத்தின் பிரதான கூறான குதிரைகள் கண்டியிலிருந்தும் புங்குடுதீவில் இருந்தும் கொண்டு வரப்பட்டு யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உலாச் சென்றன. இறுதியாக நடைபெறவுள்ள வேள்விக்கு என பாகிஸ்தானில் இருந்து உயர்தரக் குதிரைகள் கொண்டுவரப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது. அஸ்வமேத யாகத்தின் முன்னோடியாக குதிரை உலா 3 தினங்களாக யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.
முதல் நாள் காலை 7.12 மணிக்கு புகலி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து சீறிப்பாய்ந்தபடி புறப்பட்ட புரவிகள் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், சித்தன்கேணி, அளவெட்டி, சுன்னாகம், புத்தூர், நெல்லியடி, கொடிகாமம் போன்ற இடங்கள் வழியாக பயணித்து அன்றிரவு சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்கி நின்றன.
அடுத்தநாள் அங்கிருந்து புறப்பட்ட குதிரைகளின் ஊர்வலம் கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, செம்மணி, நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி, யாழ்நகர், கொக்குவில், ஆனைக்கோட்டை வழியாக காரைநகரைச் சென்றடைந்தது.
இறுதி நாளன்று காரைநகரிலுள்ள ஆலங்கண்டு வீதி, சிவன் கோயிலடி, வலந்தலை சந்தி, கிழக்கு வீதி, துறைமுகம் மேற்கு வீதி வழியாக மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தது.
ஏறக்குறைய 57 பிரதேசங்கள் வழியாகயாகக் குதிரைகள் பயணித்திருந்தன. அன்று மாலையே அஸ்வமேத யாகக் கிரியைகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. 23 ஆம் தேதி அஸ்வமேத மகா யாகம் முறைப்படி ஆரம்பமானது.
10 தினங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த மகா யாகம் ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெறுகிறது. யாகத்தின் பிரதம குருவாக சிட்டிவேரம் கண்ணகி ஆலய சிவஸ்ரீ இ.குமாரசுவாமிகுருக்கள் தலைமையில் இலங்கை சைவக் குருமணிகளும் இந்திய திருச்செந்தூர் ஆலய வேத பாராயண குருமணிகளும், காயத்திரிபீட குருமணிகளும் பங்கேற்று யாகத்தை திறம்பட நடத்தி முடிக்க உள்ளனர்.
புத்தர் சிலை நிறுவுவதை எதிர்த்து ஆா்ப்பாட்டம் நடத்தியோரை படமெடுத்த புலனாய்வாளர்கள்! எச்சரித்த யோகேஸ்வரன் எம்பி
[ புதன்கிழமை, 29 மே 2013, 12:59.22 PM GMT ]
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு.
உங்களது புகைப்படம் என்னிடம் உள்ளது என்று எச்சரிக்கை செய்ததுடன் தனது புகைப்பட கருவியால் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் புகைப்படம் எடுத்தார்.
இதன்போது அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்ற நிலைமை தோன்றியதை காணக் கூடியதாகயிருந்தது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது பெருமளவான பொலிஸ் மற்றும் படை புலனாய்வாளர்கள் சூழந்து நின்றதை காண முடிந்தது.
Geen opmerkingen:
Een reactie posten