நாயாறு கிராமத்தில் முந்திரிகைச் செய்கைக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட 40 ஏக்கர் காணி படையினர் வசம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 09:27.42 AM GMT ]
1967ம் ஆண்டு குறித்த பகுதியில் குடும்பம் ஒன்றுக்கு 5ஏக்கர் வீதம் மரமுந்திரிகைச் செய்கைக்காக அப்போதைய அரசாங்கம் நாயாறு கிராமத்திலுள்ள தமிழர்களுக்கு குறித்த நிலத்தை வழங்கியிருந்தது.
பொரளையிலுள்ள ஜயரட்ன மலர்ச்சாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்தப் நிலத்தில் மர முந்திரிகை செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில், 1983ம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக இந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்கள் முழுதாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் மிக நீண்டகால இடப்பெயர்வு வாழ்வுக்குப் பின்னர் கடந்த 2010ம் ஆண்டு மக்கள் தமது வாழ்விடங்களில் மீளக்குடியேற்றப்பட்டிருந்தனர்.
எனினும் முல்லைத்தீவு-திருகோணமலை வீதியில் வேப்பமரத்தடி சந்திக்கு இருபுறமும் உ ள்ள 100ஏக்கர் வரையிலான நிலம் தொடர்ந்தும் படையினரதும், கடற்படையினரதும் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் மக்கள் தமது நிலத்தில் மீளவும் மரமுந்திரிகை செய்கையினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் எப்போதாவது விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தபோது தமது நிலம் முழுமையாக படையினருக்கு தாரை வார்க்கப்பட்டமை தமக்கு ஏமாற்றமளிப்பதாக குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் மேற்குறித்த 29ஏக்கர் மக்களுடைய நிலத்தில், குறித்த நிலம் இராணுவத்திற்கு உரித்துடையாதாக்கப்பட்டுள்ளது. என விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து மக்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு விடயம் தொடர்பில் கேட்டிருக்கின்றனர். எனினும் குறித்த நிலம் படையினரின் தேவைக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும், அது மேலிட உத்தரவுக்கு அமையவே படையினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச செயலர் தமக்கு கூறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நிலச் சொந்தக்கரர்கள் நிலத்திற்குரிய ஆவணங்களை தாம் வைத்திருக்கும்போது அந்த நிலத்தை எவ்வாறு தமது ஒப்புதல் இல்லாமல் படையினருக்கு வழங்க முடியும், என கேள்வியெழுப்பியுள்ள மக்கள், தமது நிலத்தை மீளவும் தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கொழும்பு பொரளையில் பதற்ற நிலைமை! இந்திர ரத்ன தேரரின் கோரிக்கையை ஏற்குமாறு சிங்கள ராவய வலியறுத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 08:42.31 AM GMT ]
தீக்குளித்து உயிரிழந்துள்ள வண. போவத்த இந்திரட்ன தேரரின் பூதவுடலை இரத்தினபுரிக்கு எடுத்துச் செல்வதற்கு சிஹல ராவய உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இதேவேளை, கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் கொழும்பு வரையான காலி வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
இந்திர ரத்ன தேரரின் கோரிக்கைக்கு பிரேரணை : பொதுபல சேனா, சிங்கள ராவய வலியுறுத்தல்
பௌத்த மதத்திற்கு அடிப்படைவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தவேளையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவசரமாக மதமாற்றம், இறைச்சிக்காக மாடு வெட்டல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரேரணையை கொண்டுவர வேண்டுமென பொதுபல சேனா, மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பௌத்தர்களின் உரிமையை பாதுகாக்க முடியாத அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் எதற்காக? பலாக்காய் கொத்தவா? எனவும் அவ் அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
மிருகவதை மற்றும் அடிப்படைவாதத்தால் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உட்பட பல்லேறு கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு தனது உயிரை போவத்தே இந்திர ரத்தின தேரர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
அவர் பௌத்த மதத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உயிரைத் தியாகமாக்கினார். இந்நிலையில் தீயசக்திகள் திரிபுபடுத்தி பல காரணங்களைக் கூறுகின்றன. பௌத்தர்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினை தான் அவர் உயிரைமாய்த்ததற்கு முக்கிய காரணம். இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் ஆகும்.
நாட்டில் அடிப்படைவாத தலையீட்டால் பௌத்த தர்மத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் அடிப்படை வாதசெயற்பாடுகளால் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இது குறித்து பாராளுமன்றத்தில் அமைச்சரவை மட்டத்தில் விவாதங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட மதமாற்றத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வர வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten