தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

தமிழர்களின் வாக்குகளை இலக்கு வைத்தே கனடா செயற்படுகிறது: மார்டின் கொலாகொட் குற்றச்சாட்டு !

தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டவே கனடா, இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார்.
கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே தற்போதைய அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் மாநாட்டை புறக்கணிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்நாட்டு அரசியல் நோக்கங்களை இந்த விவகாரத்தில் மேலோங்கிக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொலாகொட் இலங்கையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் மோசமாக காணப்படுகின்றது என்பதில் தமக்கு மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதவான்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அரசாங்கத்தை விமர்சனம் செய்வோருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் சர்ச்சைகள் காணப்படுவதில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை கனேடிய அரசாங்கம் மட்டும் புறக்கணிப்பது உள்நாட்டு அரசியலை கருத்திற் கொண்டே என தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten