தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!


இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது விசாரணை வேண்டும்!- ராவண பலய
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 01:02.45 AM GMT ]
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது விசாரணைகள் நடத்தவேண்டும் என்று பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான ராவணா பலய கோரிக்கை விடுத்துள்ளது.
ஆட்ட நிர்ணயக்காரர்களின் வலைகளில் வீழ்ந்த இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றனர்.
நாட்டு மக்களின் கோரிக்கையை பொருட்படுத்தாது அவர்கள் அந்தப்போட்டிகளில் பங்கேற்றனர்.
எனவே அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ராவணா பலய கோரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 01:00.02 AM GMT ]
பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஊடக தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்று இலங்கை தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்த குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விடயம் ஏற்கனவே குறித்த தேரரால் அரச ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு தேரரால் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குறித்த செய்தியாளர் அதனை இரகசியமாக பேணியதுடன் பௌத்த பிக்கு தமக்கு தாமே தீ மூட்டிய சம்பவத்தை முழுமையாக வீடியோ மூலம் படமாக்கினார்.
இது இலங்கையின் அனைத்து அரச மற்றும் தனியார் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் குறித்த விடயம் ஊடக ஒழுக்கத்துடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ள சரித்த ரத்வத்த, இவ்வாறான சம்பவங்களின் போது மனித உயிருக்கு மதிப்பு வழங்கி ஊடக நிறுவனங்கள் ஒரு வரையறையை உருவாக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
2ம் இணைப்பு
பௌத்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதனை வீடியோ படமெடுத்த ஊடகவியலாளர் கைது
பௌத்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதனை வீடியோ படமெடுத்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர்.
 தலதா மாளிகைக்கு அருகாமையில் மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் கடந்த வெசாக் பௌர்ணமியன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பௌத்த பிக்கு உடலுக்கு பெற்றோல் ஊற்றும் போது அதனைத் தடுக்காது, தொடர்ந்தும் சம்பவத்தை வீடியோ எடுத்தமை, தற்கொலைக்கு ஊக்கமளித்ததாகவே கருதப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறித்த பௌத்த பிக்கு, ஊடகவியலாளருக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே அந்த நேரத்தில் குறித்த ஊடகவியலாளர் சம்பவத்தை வீடியோ படமெடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்குவுடனான உரையாடலின் மூலமும் தற்கொலைக்கு உதவி செய்தமை புலனாகின்றது என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten