தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு


இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றம்!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 09:54.20 AM GMT ]
ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் சென்னை நகரில் நடைபெறவிருந்த  போட்டிகள் அனைத்தும்  புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் படுகொலை செய்த சம்பவம் கடந்த பெப்ரவரியில் தமிழகத்தை உலுக்கியது.
அப்போது ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையின் வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் ஜூலை 3 ந் தேதி முதல் முதல் 7 ந் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 09:28.26 AM GMT ]
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட தயார் என ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.  
அதேவேளை, இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இறுதிக் கட்டப் போரின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து 729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஆரியசிங்க கூறினார்.
முறையாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 101 முறைப்பாடுகள் தொடர்பாகத் தாம் இதுவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், விசாரணை முடிவடைந்து தடுப்புக் காவலிலுள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் புலிகள் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் விவரங்களை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Geen opmerkingen:

Een reactie posten