தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

தமக்கெதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 11:07.56 AM GMT ]
அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் நால்வர் ஸ்ரீபுர, ஜயந்திபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் கெப்பற்றிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் சுமார் 485,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கெதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 11:03.40 AM GMT ]
தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten