[ புதன்கிழமை, 29 மே 2013, 02:28.24 AM GMT ]
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவில் தங்கியிருந்த போது தனக்கு குண்டு துளைக்காத சிறப்பு வாகனம் வழங்கப்பட்டது ஏன் என்று சுவிற்சர்லாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுவிஸ் அரசாங்கத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையிலிருந்து கொழும்பு திரும்பியதும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனிவாவில் தனக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது எதற்காக என்று சுவிஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர்கள் உயர்மட்ட உத்தரவு என்று பதிலளித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது - அவர்கள் தம்மை இலக்கு வைத்து இலங்கையில் குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்த சூழலில் ஜெனிவா மாநாட்டுக்குச் சென்ற தமக்கு அத்தகைய பாதுகாப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
ஆனால், யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டமை கவலைக்குரியதாகும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
[ புதன்கிழமை, 29 மே 2013, 03:20.19 AM GMT ]
13வது அரசியலமைப்பை ரத்துச் செய்யக்கோரும் பிரேரணையை ஜாதிக ஹெல உறுமய இன்று நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளது.
இந்த அரசியல் அமைப்பு இலங்கையின் இறைமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியே ஜாதிக ஹெல உறுமய பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
எனினும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கையின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியின் எண்ணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten