[ திங்கட்கிழமை, 27 மே 2013, 08:56.35 AM GMT ]
பல கோடி ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆகியவற்றின் கட்டடங்கள் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்கப்படமாட்டாதென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
கடந்தகாலப் போர் இடர்களால் முற்றாக அழிக்கப்பட்ட இந்தக் கட்டடங்கள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டன.
இவற்றின் வேலைகள் பூர்த்தியடைந்த போதிலும் கடந்த பல மாதங்களாக மக்களின் பாவனைக்கெனத் திறந்து வைக்கப்படவில்லை.
இதனால் இந்தப்பகுதி மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். மேலும் இந்தக் கட்டடங்களை திறந்து வைக்குமாறு உரியவர்களிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தக் கட்டடங்கள் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன.
நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த இரு கட்டடங்களையும் திறந்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மல்லாவி, கிளிநொச்சி மற்றும் பாண்டியன் குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற குடிதண்ணீர்த் திட்டங்களையும் அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது: ஏ.கே.அந்தோணி
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 09:05.01 AM GMT ]
தஞ்சையில் 180 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய ஓடுதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
இலங்கை இராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்காது என்றார். மேலும், அமைதியை இந்தியா விரும்பினாலும் பாதுகாப்பு விஷயத்தில் எதையும் விட்டுகொடுக்காது என்றார்.
அத்துடன் தஞ்சை விமான நிலையத்தை மேலும் விரிவாக்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Geen opmerkingen:
Een reactie posten