தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என அழைக்கப்பட்ட நண்பர் மறைந்துவிட்டார்!- மனோ கணேசன் இரங்கல்


கொழும்பின் பல பிரதேசங்களில் உள்ள இறைச்சிகடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 06:53.39 AM GMT ]
கொழும்பின் பல பிரதேசங்களில் உள்ள இறைச்சிக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஆங்கிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததைத் தொடர்ந்து, சில ஒழுங்கமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ள போராட்டங்களை அடுத்து இவ்வாறு இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விசாக பூரணையை முன்னிட்டு மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் அனைத்தும் இன்றையதினம் திறக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் மூடப்பட்டள்ள இறைச்சிக் கடைகள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக பொரல்லை பகுதிக்குச் சென்றிருந்த சிலோன் டுடே பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் நேற்று இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என அழைக்கப்பட்ட நண்பர் மறைந்துவிட்டார்!- மனோ கணேசன் இரங்கல்
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 07:48.55 AM GMT ]
தமிழ் பேசும் மக்களுக்கு, பெரும்பான்மை சகோதர இனத்தின் மத்தியில் புதிய நண்பர்கள் உருவாகாத நிலையில், புதிது புதிதாக இனவாத பகைமை பேசுபவர்கள்தான் நாள்தோறும் தோன்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் நம் மத்தியில் செயற்பட்டு, வாழ்ந்து, இருந்த தமிழ் பேசும் மக்களின் நண்பர்  மருத்துவ கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவு, இன்றைய இனவாத சூழ்நிலையில் மிகப்பெரும் இழப்பாக என்னால் உணர முடிகின்றது. அவரது மறைவு என் மனதை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றிருந்த வேளையில் மரணமடைந்த ஜயலத் ஜயவர்த்தன எம்பியின் மறைவு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
2007ம் வருடத்தில் என்னை சிஐடியினர் விசாரணை என்ற பெயரில் ஒன்பது மணித்தியாலம் தடுத்து வைத்து கைது செய்ய முயற்சித்த வேளையில் என்னோடு இறுதிவரை விசாரணையின் போது கூட இருந்து போலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு என்னை மீட்டு வந்தவர், ஜயலத் ஜயவர்தன ஆகும்.
ஆகவே நான் தனிப்பட்டமுறையில், ஜயலத் ஜயவர்தனவுக்கு நன்றி கூறக் கடன்பட்டுள்ளேன்.
கொழும்பில் தமிழர்கள் நாளாந்தம் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்ட, கோர யுத்தம் நடைபெற்ற காலமாக அப்போதைய காலகட்டம் இருந்தது. இன்றைய காலகட்டத்தைவிட அன்று நாளாந்த நிலைமைகள் கடும் மோசமாக இருந்தன.
எனது கட்சி உறுப்பினர்கள்கூட என்னுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய அந்த காலகட்டத்தில், ஜயலத் ஜயவர்தன என்னுடன் இணைந்து நின்று சிங்கள புலி என்ற பட்டத்தை சுமந்தார்.
அவரது இந்த தமிழ் பேசும் மக்கள் சார்பு கொள்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்த வேளையிலும் ஜயலத் ஜயவர்தன தன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆழ்ந்த இரங்கலை ஜயலத் ஜயவர்தனவின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன். அவரது இறுதி கிரியைகளில் நமது கட்சி தொண்டர்கள் தீவிரமாக பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றேன்.
இரண்டாம் இணைப்பு-
தமிழர்களாலும் எமது கட்சியாலும் என்றும் விரும்பப்பட்ட மாமனிதர் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன
தமிழர்களாலும், எமது ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியாலும் என்றும் விரும்பப்பட்டவரும் போற்றப்பட்டவர் அமரர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன என கட்சியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்களின் அழிவு பாதை தொடங்கிய காலம் முதல் இறக்கும் வரை எவ்வித மாற்றமும் இன்றி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களுக்காக சளைக்காது குரல் கொடுத்து தமிழர் பிரச்சினையை உலகறியச் செய்ததில் காத்திரமான தனக்கென ஓர் இடத்தை பெற்ற பெருந்தகை, அது மட்டுமன்றி தமிழர் துன்புறும் வேளை அவ்விடம் சென்று ஆறுதல் கூறி உதவி செய்த மனிதரான அமரர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன இவ் மாமனிதர் மறைந்தாலும் தமிழர் உள்ள வரை தமிழர்கள் இதயங்களில் இவர் மறக்கப்படமாட்டார்.
அதேவேளை எமது கட்சியுடன் மிகவும் அன்னியொன்னியமாகவும் ஒற்றுமையாகவும் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் எமது தலைவரை 2007ம் ஆண்டு புலனாய்வுத்துறை விசாரித்த போது அமரர் பத்து மணிநேரம் தனித்து காத்திருந்து,
எமது தலைவர் மனோகணேசனை விடாமல் இவ் இடத்தில் இருந்து அகலேன் என்று இருந்து தனது விசுவாசத்தை அன்றிலிருந்து இன்று வரை காட்டியதை என்றும் எமது கட்சி மறக்காது தற்போது கூட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான கெடுபிடிகளுக்கும் அதில் இருந்து மீள துணை நின்ற பெருந்தகை அமரர் ஜெயலத் ஜெயவர்த்தனா,
தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என சாதி மத பேதமற்று நேசிக்கப்பட்ட அன்னாருக்கு எனது தலைவர் மனோ கணேசன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் சார்பாக தலைசாய்த்து அஞ்சலி தெரிவிப்பதுடன் அன்னாரின் குடும்பத்தார்க்கும் அவரின் ஐக்கிய தேசிய கட்சியார்க்கும் எமது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Geen opmerkingen:

Een reactie posten