ஜனாதிபதி தேர்தலில் தப்பியோடிய இராணுவத்துடன் பொன்சேகா நாடுமுழுவதும் சுற்றினார்!- பிரிகேடியர் சாட்சியம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 02:08.06 AM GMT ]
இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக கூறப்படும் இராணுவ மோட்டார் படையணியைச் சேர்ந்த வீரர்களுடன் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடுபூராவும் சுற்றிவந்தார் என்று ஓய்வுப்பெற்ற பிரிகேடியர் அசோக வீரசிங்க சாட்சியமளித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அவருடைய உதவியாளர் சேனக்க ஹரிபிரியவுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாடாளுமன்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரொலொ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன்போது இடம்பெற்ற குறுக்கு விசாரணையிலேயே ஓய்வு பெற்ற பிரிகேடியர் அசோக வீரசிங்க மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
மேலும், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அறிவித்ததாகவும், எனினும், அவர்களை கைது செய்வது தொடர்பில் அவர் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் ஓய்வுப்பெற்ற பிரிகேடியர் அசோக வீரசிங்க சாட்சியமளித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க நேரிடும்!- சிவாஜிலிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 02:06.04 AM GMT ]
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய தனிப்பட்ட நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றை புறக்கணிக்க நேரிடும்.
இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten